• Jul 26 2025

மகிழ்ச்சியின் உச்சத்தில் பாண்டியன் ஸ்டோர் சீரியல் குழுமத்தினர், வெளியான ரகசியம்

Thiviya / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் பல வலைத் தொடர்கள் பிரபல தொலைக்காட்சி நிறுவனங்களால் ஒளிபரப்பப்பட்டு வருகின்றன. அந்த வகையில் தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட விஜய் தொலைக்காட்சி சீரியலாக கருதப்படுவது பாண்டியன் ஸ்டோர் சீரியல் ஆகும். 


இந்த சீரியல் ஆனது ஏராளமான ரசிகர்களால் பார்வையிடப்பட்டு வருகின்றது. இந்நிலையில் 1000 ஆவது எபிஷோட்டை பாண்டியன் ஸ்டோர் குழுமத்தினர் இன்று நிறைவு செய்கின்றனர்.


அந்த வகையில் அதனை வெற்றிகரமாக கொண்டாடும் வகையில் அதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்த நடிகர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து எடுத்த புகைப்படத்தை அந்த தொடரில் கஸ்தூரி அத்தையாக நடிக்கும் மீனா செல்லமுத்து என்பவர் தனது சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த பதிவானது அவரது ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றது.

Advertisement

Advertisement