• Jul 25 2025

திடீரென முடிந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் பிரபலத்தின் திருமணம்- யாரெல்லாம் போயிருக்கிறாங்க தெரியுமா?

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் முக்கிய தொலைக்காட்சிகளில் ஒன்றான விஜய் டிவியில் மூன்று வருடங்களாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன்ஸ்டோர்ஸ்.கடந்த சில வாரங்களுக்கு முன் ஒரே பிரச்சனை தான், கடைசி, வீடு என எல்லாமே போனது.ஆனாலும் ஒற்றுமையாக எல்லா பிரச்சனைகளையும் சந்தித்து வருகிறார்கள், 

இந்த வாரம் பார்த்தால் ஒரே கர்ப்பமான காட்சிகள் தான்.கதிர்-முல்லையை தொடர்ந்து இப்போது ஐஸ்வர்யா மற்றும் கண்ணன் கர்ப்பமான காட்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது.இதனால் இனிமேல் என்ன திருப்பங்கள் நடைபெறப் போகின்றது என்பதனைக் காண ரசிகர்கள் மிகவும் ஆவலாக இருக்கின்றனர்.


இந்த தொடரில் பிரசாந்த் என்ற வேடத்தில் நடிக்க வந்தவர் மகேஷ். இவருக்கும் மீனாவின் தங்கை ஸ்வேதாவிற்கும் தொடரில் நிச்சயதார்த்தம் முடிந்தது, அடுத்து திருமண காட்சிகள் எப்போது வரும் என தெரியவில்லை.இப்படியான நேரத்தில் தான் மகேஷிற்கு நிஜத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. 


மகேஷிற்கும், பிரேமலதா என்பவருக்கும் இன்று சென்னையில் உள்ள இவிஎஸ் மஹாலில் திருமணம் நடந்துள்ளது. மகேஷ் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலைத் தவிர முத்தழகு சீரியலிலும் நடித்து வருகின்றார். இவரது திருமணத்திற்கு முத்தழகு தொடர் பிரபலங்கள் மட்டும் வந்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement