• Jul 25 2025

பண மோசடியில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர்..? ஆதாரங்களை வெளியிட்டு உண்மையை நிரூபித்த பிரபலம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியின் சூப்பர் ஹிட் சீரியல்கள் லிஸ்டில் ஒன்றுதான் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'. தமிழில் உருவாக்கப்பட்ட இந்த சீரியலை பல மொழிகளில் ரீமேக் செய்து வருகின்றனர். அந்தளவிற்கு இந்த சீரியலானது ரசிகர்கள் மனங்களை பெரிதும் கவர்ந்திருக்கின்றது.


பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ரசிகர்கள் மத்தியில் காதல் மன்னனாக வலம் வருபவர் கதிர் என்கிற குமரன். இவர் இந்த சீரியலில் எப்போதும் அமைதியான ஒருவராக காணப்படுவார். கதிர் மற்றும் முல்லை கதாபாத்திரம் ஆனது ரசிகர்கள் மனதில் இடம்பிடித்துள்ளன.


இந்நிலையில் கதிர் தனது பெயரில் பண மோசடி இடம்பெற்றுள்ளதாக கூறி இன்ஸ்டா ஸ்டோரியில் ஆதாரங்களை பதிவிட்டிருக்கின்றார். மேலும் அவர் இப்பதிவில் தன்னுடைய பெயரில் பேஸ்புக்கில் பேக் அக்கவுண்ட் ஓபன் செய்யப்பட்டு, அதன் மூலமாக மற்றவர்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.


அதுமட்டுமல்லாது இன்ஸ்டா பக்கத்திலும் தனது பெயரில் போலி கணக்கு உருவாக்கப்பட்டு சிலரிடம் சாட்டிங் செய்யப்பட்டிருக்கிறது எனவும் கூறி அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினைப் பகிர்ந்துள்ளார் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்' கதிர்.


Advertisement

Advertisement