• Jul 26 2025

வாயில் சிகரெட்டுடன் நான் ரெடி தான் பாடலுக்கு மாஸ் ஆட்டம் ஆடிய பாண்டியன் ஸ்டோர்ஸ் கண்ணன்- வைரலாகும் வீடியோ

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த சீரியலில் யாரும் எதிர்பாராத விதமாக தற்பொழுது திருப்பம் நடந்துள்ளது.

அதாவது தனம் மார்புப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கின்றார்.இந்த விடயம் மீனாவுக்கு மட்டுமே தெரிந்திருக்கின்றது.வேறு யாருக்கும் இந்த விடயம் தெரியாது. தனமும் யாரிடமும் சொல்லாமல் மௌனம் காத்து வருகின்றார்.


ஐஸ்வர்யாவின் வளைகாப்பு முடிந்தவுடன் இந்த விஷயத்தை எல்லோரிடமும் சொல்லப்போவதாக தனம் சொல்லியிருந்தார். ஆனால் எல்லோருடைய சந்தோஷத்தையும் கெடுக்க வேண்டாம் என்ற காரணத்தினால் தனம் சொல்வதற்கு தயங்கி நிற்கின்றார். இதனால் அடுத்து என்ன நடக்கப் போகின்றனது என்பதை அறிய ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இது ஒரு புறம் இருக்க இந்த சீரியலில் கண்ணன் என்னும் கதாப்பாத்திரத்தில் நடித்து வருபவர் தான் சரவண விக்ரம்.இவர் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருப்பதோடு அடிக்கடி வீடியோ வெளியிடவதையும் வழக்கமாக வைத்துள்ளார்.அந்த வகையில் தற்பொழுது லியோ படத்தின் நா ரெடி தான் பாடலுக்கு நடனமாடியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரலாகி வருகின்றது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement