• Jul 25 2025

எதிர்நீச்சல் சீரியலில் என்ட்ரீ கொடுக்கவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகை - யார் தெரியுமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சின்னத்திரையில் அதிகமாக பேசப்படும் சீரியலாகவும்,இல்லத்தரசிகளை அதிகம் கவர்ந்த சீரியலாகவும் எதிர்நீச்சல் உள்ளது.

பெண் அடிமை, ஆணாதிக்கம், கட்டாய கல்யாணம் என சமூகத்தில் நடக்கும் பல விஷயங்கள் குறித்த விழிப்புணர்வை தொடர் ஏற்படுத்தி வருகிறது.

ஆதிரைக்கு கரிகாலனுடன் கட்டாய திருமணம் நடந்துள்ளது, இதனால் ரசிகர்கள் தொடர் குழுவினர் மீது கொஞ்சம் கோபத்திலும், வருத்தத்திலும் உள்ளார்கள் என்றே கூறலாம்.

அடுத்து கதையில் சொத்துப் பிரச்சனை குறித்த விஷயம் பரபரப்பாக செல்லும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.



இந்த நிலையில் எதிர்நீச்சல் சீரியலில் புதிய எண்ட்ரீயாக விஜய் தொலைக்காட்சியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் பிரபலம் சாந்தி வில்லியம்ஸ் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 


Advertisement

Advertisement