• Jul 24 2025

பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகைக்கு அடித்தது லக்... படத்தில் நடிக்க கிடைத்தது வாய்ப்பு... படு மகிழ்ச்சியில் நடிகை...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் தொலைக்காட்சியில் செம ஹிட்டாக 4 வருடங்களுக்கு மேல் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ். இந்த  சீரியலில் நடித்த நடிகை ஒருவருக்கு படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அண்ணன்,தம்பிகளுக்கு இடையிலான பாசப் போராட்டத்தை காட்டும் விதமாக எடுக்கப்பட்ட இந்த தொடர் பல வருடங்களுக்கு பிறகு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இந்த சீரியலின் இறுதி படப்பிடிப்புகள் முடிவுக்கு வந்துவிட்டன. அதுதொடர்பான தகவல்களும் இணையத்தில் பகிரப்பட்டன. இன்னும் எத்தனை எபிசோட் ஒளிபரப்பாகும் என்பது சரியாக தெரியவில்லை.

தொடர் முடிவுக்கு வர பாண்டியன் ஸ்டோர்ஸ் புகழ் கண்ணன் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சிக்கு சென்றுவிட்டார். இந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிகை சித்ரா இறப்பிற்கு பிறகு யார் முல்லையாக நடிப்பார் என பெரிய எதிர்ப்பார்ப்பு இருந்த நேரத்தில் தான் அவரது கதாபாத்திரத்தில் நடிக்க வந்தவர்தான் காவ்யா. 

"பாரதி கண்ணம்மா"' சீரியல் தொடரில் சின்ன ரோலில் நடித்து வந்த இவர் பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் முல்லையாக  நடித்துக்கொண்டிருந்தார் சில காரணங்களால் அந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டார்.

இந்த நிலையில் நடிகை காவ்யா குறித்து ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதாவது அவர் புதிய படம் ஒன்றில்நாயகியாக நடிக்க இருக்கிறார் என்றும் அது தொடர்பான தகவல்கள் கூடிய சீக்கிரம் அறிவிக்கப்படும் என்றும் இணையத்தில் தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் வெளியாக ரசிகர்கள் அவருக்கு  தொடர்ந்து வாழ்த்து கூறி வருகிறார்கள்.

Advertisement

Advertisement