• Jul 25 2025

கதாநாயகியாக களமிறங்கும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை...குவியும் வாழ்த்துக்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தற்போது விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் சீரியல்களில் ஒன்று.அதில் அண்ணன் தம்பிகளுடைய பாசத்தை மையமாகக் கொண்டு நகரும் சீரியலில் பெரும் பரபரபரப்பு இடம்பெற்றுள்ளது.

இதில் சுஜிதா, குமரன், ஸ்டாலின், வெங்கட் போன்ற நடிகர், நடிகைகள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

எனினும் தற்போதைய நிலமைப்படி ஜீவா - மீனா மற்றும் கண்ணன் - ஐஸ்வர்யா இரு ஜோடிகளும் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர்.


இந்த சீரியலில் முல்லை எனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை லாவண்யா. அத்தோடு இவர் இதற்க்கு முன் சிற்பிக்குள் முத்து எனும் சீரியலில் கதாநாயகியாக நடித்திருந்தார்.

இவ்வாறுஇருக்கையில், தற்போது ரேசர் எனும் படத்தின் மூலம் வெள்ளித்திரையில் ஹீரோயினாக அறிமுகமாகவுள்ளாராம்.


இதனால் முல்லையாக நடித்து வரும் நடிகை லாவண்யாவிற்கு ரசிகர்கள் அனைவரும் தங்களுடைய வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

Advertisement

Advertisement