• Jul 25 2025

யோகி பாபு நடிக்கும் பன்னிகுட்டி- வெளியான சென்சார் தகவல்!

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக மக்கள் பலரின் மனதைக் கொள்ளை கொண்டவரே நடிகர் யோகிபாபு.

தனது டைம்மிங் காமெடியால் ஏராளமான ரசிகர்கள் மனதைக் கவர்ந்து இழுப்பவர். இவரின் நகைச்சுவை நடிப்பை ரசிப்பதற்கென்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு.

மேலும் நடிகர் யோகிபாபு ரஜினி, அஜித், விஜய், ஜெயம் ரவி எனப்பல முன்னணி நடிகர்களின் படங்களில் காமெடி வேடத்தில் நடித்து வருவதோடு மட்டுமல்லாமல், சில காமெடி படங்களில் கதையின் நாயகனாகவும் இவரே நடித்து வருகின்றார். அத்தோடு எந்த விதமான காமெடி காட்சியாக இருந்தாலும் அதில் இறங்கி திறமையாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில் யோகி பாபு மற்றும் காமெடி நடிகர் கருணாகரன் இணைந்து நடித்த திரைப்படம் பன்னிகுட்டி. இந்த படத்தை அனுசரண் என்பவர் இயக்கியுள்ளார்.

இவர் கிருமி மற்றும் சமீபத்தில் வெளியாகி கவனம் பெற்ற ‘சுழல்’ தொடரின் இயக்குனர் ஆவார். பன்னிகுட்டி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்து ரிலீஸுக்கு தயார் ஆகியுள்ளது .

மேலும் இந்த நிலையில் இந்த படம் வரும் ஜூலை 8ஆம் தேதி ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இந்த படத்துக்கு அனைவரும் பார்க்கும் U சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement