• Jul 24 2025

இளசுகளை குறிவைத்து களமிறங்கும் பார்த்திபன்...அதுவும் இப்படியொரு கதைக்களமா?

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர், நடிகர், தயாரிப்பாளர் என பன்முக திறமை கொண்டு விளங்கும் பார்த்திபன் சர்ச்சைகளுக்கும் பஞ்சம் இல்லாதவர். பொதுவாக இவர் எது பேசினாலும் அது ஏதாவது ஒரு பிரச்சனையில் தான் முடியும் என்ற அளவுக்கு பல சம்பவங்கள் நடந்திருக்கிறது. 

அப்படித்தான் இவர் ஒரே ஷாட்டில் எடுத்திருந்த இரவின் நிழல் படமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது. ஆனால் படம் வெளியான பிறகு கொஞ்சம் அல்ல நிறையவே சர்ச்சைகளை சந்தித்து போதும்டா சாமி என பார்த்திபனை கலங்கடித்தது. ஆனால் இது போன்ற பிரச்சனைகளை எல்லாம் அவர் ஒரு பொருட்டாகவே மதித்தது கிடையாது.

அதையெல்லாம் தூர போட்டுவிட்டு அடுத்த வேலையை பார்க்க போய்விடுவார். அப்படித்தான் இவர் அடுத்ததாக இளசுகளை குறி வைக்கும் வகையில் ஒரு படத்தை உருவாக்கும் முயற்சியில் இருக்கிறார். அந்த வகையில் கமர்சியல் படங்களை தான் இனிமேல் எடுக்க போகிறேன் என்று கூறிவந்த பார்த்திபன் தற்போது தன்னுடைய அடுத்த படத்தின் பெயர் டீன் என அறிவித்திருக்கிறார்.

அந்த வகையில் இப்படம் 13 முதல் 15 வயது வரை இருக்கும் பிள்ளைகளின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்படுகிறது. இதில் அவர்கள் சந்திக்கும் நல்லது மற்றும் கெட்ட விஷயங்களையும் அவர் வெளிப்படையாக வேறு கோணத்தில் காட்ட இருக்கிறார். அப்படி பார்த்தால் இப்படம் நிச்சயம் ஏதாவது ஒரு சமூக கருத்தை உள்ளடக்கி இருக்கும் என்று தெரிகிறது.

ஆனால் பதின்ம பருவத்தில் இருக்கும் குழந்தைகளின் கதை என்பதால் எந்த மாதிரியான விஷயங்கள் காட்டப்படும் என்ற எதிர்பார்ப்பும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சென்னையில் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும் இந்த படம் பற்றிய அடுத்தடுத்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் பார்த்திபன் அடுத்த சர்ச்சைக்கு பிள்ளையார் சுழி போட்டு இருக்கிறார்.

Advertisement

Advertisement