• Jul 24 2025

உண்மை தெரிந்து காவியாவை தேடி அலையும் பார்த்திபன்- சுவாரஸியமான திருப்பங்களுடன் ஈரமான ரோஜாவே சீரியல் அப்டேட்

stella / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் சூப்பர் ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் ஈரமான ரோஜாவே சீசன் 2. காதல் கதையை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த சீரியல் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் விறுவிறுப்பாக ஓடிக் கொண்டிருக்கின்றது எனலாம்.

அந்த வகையில் இந்த வாரம் மாமியாரின் சூழ்ச்சியால் பார்த்திபன் மற்றும் அவரது மாமனார் ஆகியோர் காவியாவை வெறுத்து விட்டனர். இதனால் காவியா இரவு நேரத்தில் வெளியே சென்று விடுகின்றார். இதனைப் பார்த்த ஜுவா காவியாவைக் காப்பாற்றுகின்றார்.


அத்தோடு அவர்களின் காதல் நினைவுகள் எல்லாம் ஒளிபரப்பாகியிருந்தது. இதனை அடுத்து காவியாவை சமாதானம் செய்த ஜுவா அவரை வீட்டுக்கு கூட்டி வருகின்றார். இருப்பினும் காலையில் எழுந்தவுடன் காவியா மீண்டும் வீட்டை விட்டு செல்ல பார்த்திபன் அவள் வீட்டை விட்டு போவது தான் நல்லது என்று கூறுகின்றார்.

இதனால் காவியா வீட்டை விட்டு வெளியேறி பஸ் நிலையத்திற்கு செல்கின்றார். இந்த சமயத்தில் காவியாவைத் தேடி ஒரு குடும்பம் அவர்களின் வீட்டுக்குச் சென்று காவியா கோயிலை விட்டுச் சென்றதற்கு காரணம் தங்கள் பிள்ளை விபத்தில் சிக்கியபோது காவியா தான் காப்பாற்றினார் என்று கூறுகின்றனர்.

இதனைக்கேட்ட பார்த்திபன் அமைதியாக இருந்து விட்டு பின்னர் காவியா ஏறிச் செல்லும் பஸ்ஸை தடுத்து நிறுத்துகின்றார். எனவே அடுத்த வாரம் கண்ணிப்பாக பார்த்தீபனும் காவியாவும் சேர்ந்து விடுவார்கள் என ரசிகர்கள் செம குஷியில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement