• Jul 24 2025

அதிக விலைக்குச் சென்ற 'பதான்' படம்... காரணம் தீபிகா படுகோன் காட்டிய கவர்ச்சியின் உச்சமா..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல டைரக்டர்களில் ஒருவரான சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான், தீபிகா படுகோன் மற்றும் ஜான் ஆபிரகாம் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் 'பதான்'. இத்திரைப்படம் வரும் குடியரசு தினத்தை முன்னிட்டு ஜனவரி 25-ஆம் தேதி வெளியாகிறது. மேலும் 4 வருடங்களுக்கு பிறகு ஷாருக்கான் கதாநாயகனாக இப்படத்தில் நடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது


இந்தப் படமானது தேசபக்தியை முன்னிறுத்தும் படம் என கூறப்படும் நிலையில், அதில் இடம்பெற்றுள்ள பேஷாராம் ரங் பாடல் ஆபாசத்தின் உச்சம் என மிகப்பெரிய சர்ச்சைகள் கிளம்பின.

இருப்பினும் பதான் பாடல் 13.5 கோடி பார்வைகள் கடந்து யூடியூபில் டிரெண்டாகி வரும் நிலையில் அந்த பாடலில் ஏகப்பட்ட பிகினி உடைகளில் ஒட்டுமொத்த கட்டழகும் பளிச்சென தெரியும் படி தீபிகா படுகோன் படு ஆபாசமாக போஸ் கொடுத்திருப்பது மட்டுமின்றி மோசமான ஸ்டெப்ஸ் போட்டு ஆடியுள்ளது ஆபாசத்தின் உச்சம் என பலராலும் இன்றுவரை விமர்சிக்கப்பட்டு வருகிறது. 

அதிலும் குறிப்பாக பாஜகவினர் மற்றும் இந்து மத அமைப்பினர் இந்த பாடலுக்கு கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். அந்த பாடலில் காவி நிற பிகினி உடையில் தீபிகா படுகோனும் பச்சை நிறத்தில் பாகிஸ்தானை குறிக்கும் விதத்தில் ஷாருக்கானும் உடை அணிந்து ஆடுவதற்கு எதிராக பல சர்ச்சைகள் தாறுமாறாக வெடித்தன. .


எது எவ்வாறாயினும் ஷாருக்கான் 4 வருடம் கழித்து ஹீரோவாக இந்த படத்தில் நடித்துள்ளதால் மிகுந்த உற்சாகத்தில் இருக்கிறார். அவரது ரசிகர்களும் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதற்கிடையில், படம் ஒடிடி உரிமையில் பெரும் தொகையைப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

அந்தவகையில் படம் திரையரங்குகளில் வருவதற்கு முன்பே அதன் பட்ஜெட்டில் 40 சதவீதத்தை பெற்றுவிட்டது. இந்த தொகையானது 'கேஜிஎப் 2' போன்ற ஒரு பிரமாண்ட திரைப்படத்தை உருவாக்க கூடிய ஒரு தொகையாகும். 

இப்படத்தின் ஒடிடி உரிமை அமேசான் பிரைம் வீடியோவுக்கு விற்கப்பட்டது. அத்தோடு தயாரிப்பாளர்கள் அதற்காக சுமார் ரூ 100 கோடியை வசூலித்ததும் உள்ளனர். இந்நிலையில் படம் திரையரங்குகளில் வெளியான 2 மாதங்களுக்குப் பிறகுதான் ஒடிடியில் திரையிடப்படும் என்று கூறப்படுகிறது.மேலும் கடந்த சனிக்கிழமைதான் தயாரிப்பாளர்கள் டிஜிட்டல் தளத்துடன் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement