• Jul 25 2025

சர்ச்சையில் முடிந்த தமது வாழ்க்கையை படமாக்கும் பவித்ரா-நரேஷ்...ஹீரோ யார் தெரியுமா..? வெளியானது முழு விபரம்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல கன்னட நடிகை பவித்ரா லோகேஷ். தமிழில் கவுரவம், வீட்ல விசேஷங்க உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். இதேபோல் தெலுங்கு சினிமாவிலும் பல படங்களில் நடித்துள்ளார் .அத்தோடு பவித்ரா லோகேஷ். 44 வயதான பவித்ரா லோகேஷ் ஏற்கனவே இரண்டு முறை திருமணம் ஆகி விவாகரத்தானவர்.இவ்வாறுஇருக்கையில் பிரபல தெலுங்கு நடிகரான மகேஷ் பாபுவின் சகோதரரான நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

அத்தோடு இருவரும் டேட்டிங் செல்லும் புகைப்படங்களும் அடிக்கடி இணையத்தில் வெளியாகி  பெரும் பரபரப்பை கிளப்பி வந்தது. 60 வதயான நடிகர் நரேஷ் ஏற்கனவே மூன்று முறை திருமணம் ஆனவர். நடிகை பவித்ரா லோகேஷுடன் காதல் மலர்ந்ததை தொடர்ந்து மூன்றாவது மனைவியிடம் விவாகரத்து கேட்டு நீதிமன்றம் சென்றுள்ளார் நரேஷ் பாபு.



தனது காதலியான பவித்ரா லோகேஷுடன் புத்தாண்டை கொண்டாடிய நரேஷ் பாபு, அப்போது அவருக்கு லிப்லாக் கொடுத்த வீடியோவை பகிர்ந்து  விரைவில் திருமணம் என்று அறிவித்தார். இவ்வாறுஇருக்கையில் நரேஷ் பாபுவும் பவித்ரா லோகேஷும் திருமணம் செய்து கொண்ட வீடியோவை சில நாட்களுக்கு முன் வெளியிட்டு இருந்தனர்.


நரேசுக்கு ரூ.1500 கோடி சொத்துக்கள் உள்ளன என்றும் அதை அபகரிக்கும் திட்டத்தோடு அவரை பவித்ரா மணந்துள்ளார் என்றும் பவித்ராவின் முதல் கணவர் குற்றம் சாட்டினார்.

இந்த நிலையில் நரேஷ், பவித்ராவின் காதல் சினிமா படமாக தயாராகிறது.அத்தோடு இந்த படத்துக்கு 'மல்லி பெல்லி' என்று பெயர் வைத்துள்ளனர். படத்தில் அவர்களே நடிக்கிறார்கள். எம்.எஸ்.ராஜு டைரக்டு செய்கிறார்.

இப் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டு உள்ளனர். அதில் பவித்ரா வெட்கத்தோடு கோலமிட, நரேஷ் முழங்காலில் மண்டியிட்டு சிரித்தபடி ரசிப்பது போன்ற காட்சி உள்ளது. இதில் ஜெயசுதா, சரத்பாபு, அனன்யா நாகல்லா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள்.


Advertisement

Advertisement