• Jul 25 2025

திடீரென விபத்தில் சிக்கிய பவித்ரா- தற்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?- அவரே கூறிய அதிர்ச்சித் தகவல்

stella / 1 year ago

Advertisement

Listen News!

மாடர்லிங் துறையைச் சேர்ந்த பவித்ரா ஆரம்பத்தில் சின்னச்சின்ன குறும்படங்களில் நடித்து வந்தார். இது தவிர பல ஆல்பம் பாடல்களிலும் நடித்திருக்கின்றார். இருப்பினும் இவரைப் பிரபல்யப்படுத்தியது விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி தான்.இந்த நிகழ்ச்சியினால் இவருக்கென்று தனி ரசிகர் பட்டாளமே உருவானது.

'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் எலிமினேட் செய்யப்பட்டு வெளியேறினாலும், பின்னர் வையில் கார்டு சுற்றின் மூலம், மீண்டும் என்ட்ரி கொடுத்து பைனல் வரை சென்றார்.இதனை அடுத்து இவருக்கு படவாய்ப்புக்களும் குவிய ஆரம்பித்தன. அந்த வகையில், காமெடி நடிகர் சதீஷ் ஹீரோவாக நடித்த  'நாய் சேகர்' என்கிற படத்தில் சதீஷ்க்கு ஜோடியாக  நடித்திருந்தார். 


ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்திருந்த இந்த திரைப்படம், கடந்த ஆண்டு வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து தமிழ் மற்றும் மலையாளத்தில் சில படங்களில் நடித்து வருகிறார் .சமூக வலைதளத்தில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் பவித்ரா,தன்னுடைய புகைப்படங்களை பதிவிட்டு வருவார்.


இந்த நிலையில் அண்மையில் ரசிகர்களுடன் பேசிய பவித்ரா, சிறிய விபத்தில் சிக்கியதாகவும். பெரிய அடி எதுவும் இல்லை,  மூன்று வாரங்கள் ஆகிவிட்டது, தற்போது அந்த விபத்தில் இருந்து மெல்ல மெல்ல மீண்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.இதனால் பலரும், விரைவில் பவித்ரா முழுமையாக குணமடைய தங்களின் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement