• Jul 25 2025

பிரபல நடிகர் பவன் கல்யாண்.. 3வது மனைவியுடன் விரைவில் விவாகரத்து? வெளியான ஷாக்கிங் தகவல்..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பவர் ஸ்டார் பவன் கல்யாண், தெலுங்கு திரை உலகில் கொடிகட்டி பறக்கும் ஒரு சூப்பர் ஹிட் நடிகர் மற்றும் அரசியல்வாதி. இவர் பிரபல தெலுங்கு நடிகர் சிரஞ்சீவியின் தம்பி என்பது குறிப்பிடத்தக்கது. குடும்ப வாழ்க்கையையும், அரசியலையும் சிறப்பாக கவனித்துக் கொண்டு பயணித்து வரும் பவன் கல்யாண் வாழ்க்கையில் தற்போது காதல் கசக்கிறது என்று தான் கூறவேண்டும்.

அவரது மூன்றாவது மனைவியும், ரஷ்ய மாடலுமான Anna Lezhneva என்பவரை அவர் விவாகரத்து செய்ய உள்ளதாக தகவல்கள் கசிந்து வருகிறது. கடந்த சில காலமாக அவர்கள் இருவரும் இணைந்து வாழவில்லை என்றும், பவன் கல்யாண் குடும்ப நிகழ்ச்சிகளில் Anna தற்பொழுது கலந்து கொள்வதில்லை என்றும் கூறப்படுகிறது.

இவர்கள் இருவரும் பிரிந்து  வாழ்ந்து வரும் நிலையில் விரைவில் இவர்கள் விவாகரத்து பெற உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும் இதுவரை இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. 51 வயதாகும் பவன் கல்யாண் கடந்த 1997ம் ஆண்டு நந்தினி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். சுமார் 11 ஆண்டுகள் அவருடன் வாழ்ந்து வந்த நிலையில் அவரை விவாகரத்து செய்துவிட்டு 2009ம் ஆண்டு ரேணு தேசாய் என்ற பெண்ணை மணமுடித்தார். 

ஆனால் அதன் பிறகு ஏற்பட்ட சிறு பிரச்சனையால் ரேணுவையும் விவாகரத்து செய்த நடிகர் பவன் கல்யாண், ரஷ்ய மாடலான அண்ணாவை கடந்த 2013ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இவர்கள் இருவருக்கும் போலினா அஞ்சனா என்ற மகளும் மார்க் சங்கர் என்ற மகனும் உள்ளனர். 

பெற்றோர்கள் என்ற பொறுப்பான நிலையில் இருக்கும் இந்த இருவரும் தான் தற்பொழுது பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். விரைவில் இவர்கள் விவாகரத்து செய்யவும் உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.

Advertisement

Advertisement