• Jul 25 2025

கொடை வள்ளல் மயில்சாமியின் சொத்து மதிப்பு.. இத்தனை கோடிகளா.. தீயாய்ப் பரவும் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல நகைச்சுவை நடிகரான மயில்சாமி கடந்த ஞாயிற்றுக் கிழமை அதிகாலை மரணமடைந்துள்ளார். தீவிர சிவபக்தரான இவரின் உடலுக்கு சிவ வாத்தியங்கள் முழங்க அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் நூற்றுக்கணக்கான ரசிகர்கள் சூழ ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட மயில்சாமியின் உடல் நேற்றைய தினம் சென்னை வடபழனியில் உள்ள ஏவிஎம் மின் மயானத்தில் இறுதிச் சடங்கிற்கு பிறகு தகனம் செய்யப்பட்டது.


அனைவருக்கும் உதவும் மனப்பான்மை கொண்ட கொடை வள்ளலான மயில்சாமியின் மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து மயில்சாமி தொடர்பான விபரங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிய வண்ணமே இருக்கின்றது. 


இந்நிலையில் தற்போது மயில்சாமியின் சொத்து விபரம் குறித்த தகவல் வெளியாகி இருக்கின்றது. அதாவது  மறைந்த நடிகர் மயில்சாமிக்கு சென்னையில் 2 வீடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது அவருக்கு சொந்தமாக 2 ஹோட்டல்களும் உள்ளன என தகவல் வெளியாகியுள்ளது.


அந்தவகையில் 2019 ஆம் ஆண்டின் படி மயில்சாமியின் சொத்து மதிப்பு 18 கோடி ரூபாய் என்று கூறப்படுகிறது. இவை அனைத்துமே மயில்சாமியின் கணக்கில் உள்ள சொத்துக்கள் எனவும் கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாது மயில்சாமியிடம் 5 கார்கள் மற்றும் 7 பைக்குகள் உள்ளன எனவும் கூறப்படுகின்றது. இருப்பினும் இந்த தகவல்கள் யாவும் எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.. 

Advertisement

Advertisement