• Jul 25 2025

ஆபாச வெப்சைட்டில் போட்டோ... தற்கொலைக்கு முயன்ற கவர்ச்சி நடிகை ..நடந்தது என்ன..?

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

பாலிவுட்டில் சர்ச்சைக்குரிய நடிகையாக வலம் வருபவர் உர்பி ஜாவத். இவர் பிக்பாஸ் ஓடிடி நிகழ்ச்சியில் கலந்துகொண்டபின்  விசித்திரமான உடைகளில் போட்டோக்களை பதிவிட்டு அதன் மூலம் பேசு பொருள் ஆனார். அவரின் இந்த எடக்கு முடக்கான போட்டோஷூட்கள் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டாலும் அதன்மூலமே புகழ்பெற்றுவிட்டார் உர்பி ஜாவத். இவர் தான் இந்த நிலைக்கு வந்தது ஏன் என்பது குறித்து சமீபத்திய பேட்டியில் கண்ணீர் மல்க கூறியுள்ளார்.

அதில் அவர் தெரிவித்த : “லக்னோவில் பிறந்து வளர்ந்த நான் டாப்ஸ் மேல் ஓவர் கோட் போட்டு தான் வெளியே செல்வேன். ஆனால் எனக்கு 15 வயசு இருக்கும்போது எனக்கே தெரியாமல் என்னுடைய போட்டோவை யாரோ ஆபாச வெப்சைட்டில் பதிவேற்றிவிட்டார்கள். இந்த தகவல் என்னுடைய உறவினர்கள் மூலம் என் தந்தையின் காதுக்கு சென்றது.எனினும்  அப்போது அவர் என்னை அடித்து துன்புறுத்தினார்.

இத்தனைக்கும் அது என்னுடைய சோசியல் மீடியா பக்கத்தில் இருந்து எடுக்கப்பட்ட நார்மலான புகைப்படம் தான். ஆனால் அதனை புரிந்துகொள்ளாத என் தந்தை, என்ன ஆபாச படத்துல நடிக்கப்போறியா என கேட்டு என்ன பெல்டால் அடித்து சித்ரவதை செய்தார். அவரால் நான் உடல் அளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிப்புக்கு உள்ளானேன். 

ஆபாச தளத்தில் என் புகைப்படம் வந்த பின்னர் அவர் என்னை பார்ன் ஸ்டார் என்று தான் அழைத்து வந்தார். இந்த மாதிரி நடிக்கிறதுக்கு 50 லட்சம் தாராங்களாமே நீ எவ்வளவு காசு வாங்குன என கேட்டு டார்ச்சர் செய்தார். அதையெல்லாம் பொறுத்துக்கொண்டு 2 ஆண்டுகள் சமாளித்தேன். ஒருகட்டத்தில் தந்தையின் கொடுமை தாங்க முடியாமல் தற்கொலை செய்யவும் முயன்றேன். அதையும் என்னால் சரியாக செய்ய முடியவில்லை.

இதையடுத்து 17 வயதில் தான் வீட்டை விட்டு வெளியேறி மும்பைக்கு ஓடி வந்தேன். அத்தோடு அங்கு சின்னத்திரை சீரியல்களில் நடிக்க வாய்ப்பு தேடி அலைந்தேன். அப்போது பிக்பாஸ் வாய்ப்பு கிடைத்தது. இதன்மூலம் என் வாழ்க்கையே மாறிவிடும் என நினைத்தேன். ஆனால் அதிலிருந்து ஒரே வாரத்தில் எலிமினேட் செய்யப்பட்டேன். இருந்தாலும், தற்போது தனக்கு கிடைத்திருக்கும் இந்த புகழுக்கு காரணம் அந்த ஒரு வார பிக்பாஸ் வாய்ப்பு தான்” என கூறியுள்ளார் உர்பி ஜாவத்.

Advertisement

Advertisement