• Jul 26 2025

கதாநாயகியின் ஆடையைத் துவைத்த இயக்குநர்- மனைவிக்கு அனுப்பப்பட்ட புகைப்படம்-நடந்தது என்ன..?

Aishu / 3 years ago

Advertisement

Listen News!

'போத்தனூர் தபால் நிலையம்' என்ற படம் மே மாதக் கடைசியில் ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்ப்பு பெற்றது.

பிரவீண் இப்படத்தை இயக்கி, கதாநாயகனாகவும் நடிக்க, கதாநாயகியாக அஞ்சலி ராவ் நடித்திருந்தார்.

மேலும் இப்படத்திற்காக இயக்கம் மட்டுமல்லாமல் பல வேலைகளையும் பார்த்ததாக பிரவீண் கடந்த சில நாட்களாகவே பல பதிவுகளை சம்பந்தப்பட்ட புகைப்படங்களுடன் பதிவிட்டு வருகின்றார். நேற்று ஒரு பதிவில் படத்தின் கதாநாயகியின் ஆடைகளை அவரே துவைத்ததாக பதிவிட்டுள்ளார்.

இது தற்போது அவரின் ரசிகர்களிடத்தே பேசு பொருளாக அமைந்துள்ளது.

“அனைத்து முக்கிய கதாபாத்திரங்களின் ஆடைகள் என்னால் மட்டுமே துவைக்கப்பட்டன. வாஷிங் மெஷின் பயன்படுத்தப்படவில்லை. ஏனென்றால் எங்களிடம் ஒரே ஒரு செட் மட்டுமே இருந்தது, மேலும் அதை சில வருடங்களாக மெயின்டைன் செய்தாக வேண்டும். நான் கதாநாயகியின் ஆடையைத் துவைத்த போது எனது உதவி இயக்குநர் இந்த புகைப்படத்தை எடுத்து எனது மனைவிக்கு அனுப்பிவிட்டார். அடுத்து என்ன நடந்திருக்கும், யூகியுங்கள்,” எனப் பதிவிட்டுள்ளார்.

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement