• Jul 25 2025

சிறந்த நடிகர் விருதை தட்டி தூக்கிய அல்லு அர்ஜுன்... வைரலாக பார்க்கப்பட்டு வரும் புகைப்படங்கள்...

subiththira / 1 year ago

Advertisement

Listen News!

டெல்லியில் நேற்று மிகவும் பிரமாண்டமாக 2021 ஆம் ஆண்டுக்கான தேசிய விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த நடிகருக்கான விருதை வாங்கிய நடிகர் அல்லு அர்ஜுன் தந்து டுவிட்டரில் அது தொடர்பான புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். 


2021 ஆம் ஆண்டு வெளியான இந்திய திரைப்படங்களில், 24 பிரிவின் கீழ் தேசிய விருது கடந்த ஆகஸ்ட் மாதம் அறிவிக்கப்பட்டது. இந்த முறை அறிவிக்கப்பட்ட தேசிய விருதுகள், தமிழ் திரையுலகை  சேர்ந்தவர்களுக்கு மிகப்பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. கண்டிப்பாக தேசிய விருதை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட சார்பட்டா பரம்பரை, ஜெய் பீம், கர்ணன்  போன்ற படங்கள் ஒரு பிரிவில் கூட தேசிய விருது கிடைக்காமல் போனது.ஆனால் கொஞ்சம் ஆறுதல் படும் விதத்தில், சிறந்த தமிழ் திரைப்படம் என்கிற பிரிவில் 'கடைசி விவசாயி' திரைப்படம் தேசிய விருதை பெற்ற நிலையில், இந்த படத்தில் நடித்த நல்லாண்டிக்கு சிறப்பு விருது வழங்கப்பட்டது.

மேலும் நடிகர் பார்த்திபன் இயக்கிய இரவின் நிழல் படத்தில் இடம் பெற்ற மாயாவா சாயவா பாடலை பாடிய ஸ்ரேயா கோஷலுக்கு, சிறந்த பாடகிக்கான விருது அறிவிக்கப்பட்டது. அதே போல் கருவறை என்கிற ஆவணப்படத்திற்கு இசையமைத்த, ஸ்ரீகாந்த் தேவாவுக்கு சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதும், சிறந்த கல்வி திரைப்படம் என்கிற பிரிவில் லெனின் இயக்கிய 'சிற்பங்களின் சிற்பங்கள்' படத்திற்கும் விருதுகள் அறிவிக்கப்பட்டது.


இந்நிலையால் சிறந்த நடிகருக்கான தேசிய விருதை பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் பெற்றார்.  அதுதொடர்பான புகைப்படங்களை தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தற்போது இதுகுறித்த புகைப்படங்கள் சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


Advertisement

Advertisement