• Sep 12 2025

கவினை கட்டியணைத்தபடி நிற்கும் பாடகி... திருமண அறிவிப்பிற்கு மத்தியில் வெளிவந்த புகைப்படம்.!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

'சரவணன் மீனாட்சி' சீரியலின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். சீரியல்களில் நடித்து வந்த கவின் ‘நட்புன்னா என்னன்னு தெரியுமா’ என்ற படத்தின் மூலம் சினிமாவில் ஹீரோவாகவும் அறிமுகமானார்.


இப்படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியைப் பெற்றுக் கொடுக்காவிட்டாலும் லிப்ட், டாடா படத்தின் மூலம் மென்மேலும் பிரபலமானார். அதுமட்டுமல்லாது கவின் 2019-ஆம் ஆண்டு கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியிலும் போட்டியாளராக கவின் பங்கேற்றிருந்தார்.


அந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற சக போட்டியாளரான லாஸ்லியாவும் இவரும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வெளியாகி இருந்தன. மேலும் அபிராமி, சாக்ஷியுடனும் காதல் சர்ச்சைகளில் சிக்கி பரபரப்பாக பேசப்பட்டார்.


இந்த நிலையில் கவினுக்கு வரும் ஆகஸ்ட் 20-ஆம் தேதி கவினுக்கு திருமணம் நடைபெற இருப்பதாகவும், வீட்டில் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொள்ள கவின் விருப்பம் தெரிவித்ததாகவும் ஒரு செய்தி உலா வந்து கொண்டிருக்கின்றது. 


இதனையடுத்து தற்போது விஜய் டிவி சூப்பர் சிங்கர் பிரபலமும், பாடகியான நித்யஸ்ரீ கவினுடன் நெருக்கமாக நின்று எடுத்த புகைப்படங்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கின்றார். இப்புகைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகின்றன.


Advertisement

Advertisement