• Jul 25 2025

''ப்ளீஸ் அத மட்டும் கேக்காதீங்க''...பொன்னியின் செல்வன் மேடையில் பதறியடித்த த்ரிஷா!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில், பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் உலகம் முழுவதும் பான் இந்திய திரைப்படமாக தமிழ்,தெலுங்கு, இந்தி, மலையாளம் மொழியில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. உலகம் முழுவதும் 500 கோடி ரூபாய்வரை வசூலித்தது. 

படத்தில் கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரகாஷ் ராஜ், சரத்குமார், ஜெயராம், பிரபு, விக்ரம்பிரபு,நாசர் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகம் ஏப்ரல் 28ந் தேதி வெளியாக உள்ள நிலையில், நேற்று சென்னை அண்ணா பல்கலைகழத்தில் வைத்து Ps2 Antham வெளியீட்டு விழா நடந்தது. 

இதில் நடிகர்கள் த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். த்ரிஷா மேடையேறி பேசத்தொடங்கியதும், அங்கிருந்த மாணவர்கள் லியோ படத்தின் அப்டேட்டை கேட்டு லியோ, லியோ என கத்தத் தொடங்கினர். 

இதனால்,திக்கு முக்காடிப்போன த்ரிஷா அதை அப்புறமாக பேசலாம் என்று ரசிகர்களை சமாதானப்படுத்தினார்.

இதைத்தொடர்ந்து பேசிய த்ரிஷா, முதலில் உங்கள் அனைவருக்கும் மிகவும் நன்றி. குந்தவை கதாபாத்திரத்திற்கு இப்படி ஒரு ரெஸ்பான்ஸ் கிடைக்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை. அந்த படத்திற்காக நாங்கள் கடுமையாக உழைத்து இருக்கிறோம். இருந்தாலும், குந்தவை என்ற கதாபாத்திரம் இந்த அளவுக்கு வைரலானதற்கு காரணம் நீங்கள்தான். அதற்கு மிகவும் நன்றி என பேசியுள்ளார்.


Advertisement

Advertisement