• Jul 25 2025

ஆஸ்கர் விருது பெற்ற தம்பதி பொம்மன் - பெள்ளியை சந்தித்த பிரதமர் மோடி

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நீலகிரி மாவட்டம் முதுமலையில் தாயைப்பிரிந்த ரகு, பொம்மி ஆகிய குட்டி யானைகள் மற்றும் அதனை பராமரிக்கும் பாகனுக்கும் இடையே உள்ள உறவை ஜனரஞ்சகமாக சித்தரிக்கும் வகையில் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்' என்ற ஆவணப்படம் எடுக்கப்பட்டது. 

ஆஸ்கர் விருது கிடைத்த பிறகு இந்த படத்தில் நடித்த முதுமலை தெப்பக்காடு பகுதியை சேர்ந்த பாகன் பொம்மன், பெள்ளி தம்பதியினர் உலக அளவில் புகழ் பெற்று விட்டனர். அவர்களை பல்வேறு தரப்பினரும் பாராட்டினர்.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நீலகிரி தெப்பக்காடு பாகன் தம்பதிகளான பொம்மன் -பெள்ளியை இன்று சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து ஆவண குறும்படத்தில் நடித்த யானையையும் பார்வையிட்டார்


Advertisement

Advertisement