• Jul 24 2025

திருட்டு விவகாரத்தில் அதிரடித் திருப்பம்.. ஐஸ்வர்யா ரஜினிகாந்த் மீது போலீஸ் தீவிர விசாரணை.. வெளியான அதிர்ச்சித் தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் மகளும் திரைப்பட இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தின் வீட்டில் நகைகள் திருடப்பட்ட வழக்கின் விசாரணையானது தற்போது தாறுமாறாக  சூடு பிடித்துள்ளது. 

அந்தவகையில் சமீபத்தில் தேனாம்பேட்டை செயின்ட் மேரீஸ் சாலையில் உள்ள தனது வீட்டில் லாக்கரில் இருந்த தங்கம், வைர நகைகள் காணவில்லை என ஐஸ்வர்யா போலீசில் புகாரளித்துள்ளார். இதில் காணாமல் போன நகைகளின் மதிப்பு 60 சவரன் என புகாரில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. 


அதுமட்டுமல்லாது தனது தங்கை திருமணத்திற்கு பிறகு 2019 ஆம் ஆண்டு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த நகை மூன்று முறை வீடு மாறியும் எடுக்கப்படவில்லை என்று அந்தப் புகாரில் ஐஸ்வர்யா ஏற்கெனவே குறிப்பிட்டிருந்தார். 

இதனைத் தொடர்ந்து போலீசார் ஐஸ்வர்யா அளித்த புகைப்படங்கள் அடிப்படையாக கொண்டு பணிப்பெண்கள் மற்றும் கார் ஓட்டுநர் ஆகியோரிடம் தீவிர விசாரணை நடத்தினர். இதில் பணிப்பெண் ஈஸ்வரி கடந்த 4 ஆண்டுகளாக கொஞ்சம் கொஞ்சமாக நகைகளை திருடி வந்ததுஅம்பலமாகியது  என்றும், இதுவரை 20 பவுன் நகைகள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்தும் போலீஸ் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர்.


இந்நிலையில் தற்போது, ஐஸ்வர்யா ரஜினிகாந்த் குறிப்பிட்ட நகைகளின் அளவை விட அதிகப்படியான நகைகள் மீட்கப்பட்டுள்ளதால், தற்போது விசாரணையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்தும் உட்படுத்தப்படவுள்ளார்.  அதுமட்டுமல்லாது அவர் நகை வாங்கிய பில்களை அடிப்படையாக வைத்து விசாரணை நடத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது. 

Advertisement

Advertisement