• Jul 26 2025

சினிமா பட பாணியில் காரின் மீது பயணித்த நடிகர் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு…

stella / 2 years ago

Advertisement

Listen News!

தெலுங்கு சினிமாவில் முக்கிய நடிகராக வலம் வருபவர் தான் பவன் கல்யாண்.இவர் ஆந்திராவின் குண்டூர் மாவட்டத்தில், சாலைப் பணிகளுக்காக வீடுகள் இடிக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து பாதிக்கப்பட்டோருக்கு ஆறுதல் சொல்ல கடந்த வாரம் சென்றார்.

அரசியல்வாதியாக வலம் வரும் இவர் சினிமா பட பாணியில் காரின் மேற்கூரை மீது அமர்ந்து பயணித்துக் கொண்டிருந்தார். இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் ஆதரவாளர்கள் பின் தொடர்ந்தனர். இந்த சம்பவம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.


பவன் கல்யாணின் செயலால் கடுப்பான போலீசார், அவரை தடுக்க முயன்றனர். சிறிது தூரம் முன் அவரது வாகனத்தை நிறுத்தி அவரை கீழே இறக்கினர். இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்களை சந்திக்க சில கிலோ மீட்டர் நடந்தே சென்றுள்ளார் பவண் கல்யான்.

சினிமா பட காட்சிகளுக்கு இணையாக பவன் கல்யாண் காரில் சென்றது அவரது ரசிகர்களை கவர்ந்தாலும், விதிகளை மீறி கார் பேரணி நடத்தியதாக புகார்கள் எழுந்தன. விதிகளை மீறி கார் பேரணியை நடத்தியதால் பவன் கல்யாண் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement