• Jul 25 2025

66 வயதுடைய பிரபல நடிகருக்கு 30 முறை முத்தம் கொடுத்த பொன்னியின் செல்வன் பட நடிகை

stella / 2 years ago

Advertisement

Listen News!


மாடல் அழகியாக தனது கெரியரை தொடங்கிய ஷோபிதா துலிபாலா, இவர் கடந்த 2016-ம் ஆண்டு பாலிவுட்டில் வெளியான ராமன் ராகவ் 2.0 என்கிற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமாகினார். இதையடுத்து தெலுங்கு மற்றும் மலையாள படங்களிலும் நடிக்கத் தொடங்கிய ஷோபிதா, கடந்தாண்டு தமிழ் திரையுலகிலும் எண்ட்ரி கொடுத்தார்.


அந்த வகையில், மணிரத்னம் இயக்கத்தில் வெளியான  பொன்னியின் செல்வன் மூலம் கோலிவுட்டில் எண்ட்ரி கொடுத்தார்.அதில் அருண்மொழி வர்மனாக நடித்துள்ள ஜெயம் ரவியின் காதலியும், குந்தவை திரிஷாவின் தோழியுமான வானதி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் .முதல் பாகத்தில் இவருக்கு பெரிய அளவில் ஸ்கோப் இல்லாவிட்டாலும், இரண்டாம் பாகம் முழுக்க இவரது காட்சிகள் அதிகம் இடம்பெறும் என கூறப்படுகிறது.


இப்படி பொன்னியின் செல்வன் படத்தில் அடக்க ஒடுக்கமாக நடித்திருந்த ஷோபிதா, பாலிவுட்டில் தற்போது நடித்துள்ள தி நைட் மேனேஜர் என்கிற வெப் தொடரில் கவர்ச்சியில் புகுந்து விளையாடி உள்ளார் என்று தான் சொல்ல வேண்டும். பிகினி காட்சிகள், லிப் லாக் முத்தக் காட்சிகள் என அன்லிமிடெட் கவர்ச்சி காட்டி ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார்.


இதில் சர்ச்சையான விஷயம் என்னவென்றால், இந்த வெப் தொடரில் நடித்துள்ள மூத்த பாலிவுட் நடிகரான அனில் கபூருடன் அவர் 30-க்கும் மேற்பட்ட முத்தக் காட்சிகளில் நடித்துள்ளது தான். 66 வயதாகும் அனில் கபூர் உடன் லிப் லாக் காட்சிகளிலும் ஷோபிதா நடித்துள்ளதை பார்த்து பலரும் வாயடைத்துப் போய் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement