• Jul 25 2025

லியோ படத்துடன் மோதுகிறதா பொன்னியின் செல்வன் 2 ..? வெளியான ஷாக்கிங் தகவல்.!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாவது பாகம் விறு விறுப்பாக உருவாகி வருகிறது. இந்த இரண்டாவது பாகம் வரும் ஏப்ரல் 28-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

விஷயம் என்னவென்றால் , பொன்னியின் செல்வன் 2 திரைப்படம் முதல் பாகத்தை விட இன்னும் பிரமாண்டமாக இருக்கவேண்டும் எனவே படத்திற்கான சிஜி வேலைகள் இன்னும் முடியாத காரணத்தினால் படத்தை அக்டோபர் மாதம் திரைக்கு கொண்டு வரலாம் என பல குழு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

அக்டோபர் மாதம் இறுதியில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாம். இந்த தகவல் பொன்னியின் செல்வன் 2வை பார்க்க ஆவலுடை காத்திருந்தவர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது. மேலும் ஏற்கனவே விஜய் நடித்து வரும் லியோ திரைப்படமும் அக்டோபர்19-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

எனவே லியோ திரைப்படமும் பொன்னியின் செல்வன் 2 திரைப்படமும் மோத அதிக வாய்ப்புகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. மேலும், நவம்பர் மாதம் 12-ஆம் தேதி தீபாவளி என்பதால் அதற்கு முன்பே படத்தை வெளியீட்டால் படத்திற்கு நல்ல வசூல் கிடைக்கும் என்பதால் பல படங்களின் தயாரிப்பு நிறுவனங்கள் அக்டோபர் மாதத்தில் தங்களுடைய படங்களை வெளியிட திட்டமிட்டு வருகிறார்களாம்.


Advertisement

Advertisement