• Jul 24 2025

லைகா நிறுவனத்தில் நடந்த திடீர் சோதனைக்கு... பொன்னியின் செல்வன் படம் தான் மூல காரணமாம்.. வெளியானது தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

பிரபல தயாரிப்பு நிறுவனமாக திகழ்ந்து வருவது லைகா. இந்நிறுவனமானது கோலிவுட்டில் பல்வேறு ஹிட் படங்களை தயாரித்து உள்ளது. அந்தவகையில் கடைசியாக லைகா நிறுவனம் தயாரிப்பில் வெளிவந்த பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் ரூ.300 கோடிக்கு மேல் வசூலித்து வெற்றி நடை போட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.


அத்தோடு அஜித்தின் விடாமுயற்சி படத்தினையும் லைகா நிறுவனம் தான் தயாரித்து வருகிறது. இந்நிலையில் நேற்றைய தினம் சென்னையில் உள்ள லைகா நிறுவனத்துக்கு சொந்தமான 8 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.


இதனையடுத்து தற்போது இந்த சோதனை நினைவடைந்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கின்றது. மேலும் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் கிடைத்த வருவாயை முறையாக கணக்கு காட்டவில்லை என்ற புகாரின் அடைப்படையில் தான் இந்த சோதனை இடம்பெற்றதாக கூறப்படுகின்றது.

Advertisement

Advertisement