தமிழ்த் திரையுலகில் ஜுவா நடிப்பில் வெளியான முகமூடி என்னும் படத்தின் மூலம் அறிமுகமாகியவர் தான் பூஜா ஹெக்டே. இப்படத்தில் கிடைத்த கிடைத்த வரவேற்பைத் தொடர்ந்து தெலுங்கில் படவாய்ப்புகள் குவிந்ததால் அதில் பல படங்களை நடிப்பதில் ஆர்வம் காட்டி வந்தார்.
தொடர்ந்து தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவர் தமிழில் தளபதி நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படத்தின் மூலம் மீண்டும் அறிமுகமானார். தற்பொழுது பதிவு ஒன்றினைப் போட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது

மும்பையிலிருந்து புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் பயணித்தாகவும், அப்போது அதிலிருந்த விமான ஊழியர் விபுல் நாகேஷ் என்பவர், தன்னிடம் தகாத முறையில் நடந்து கொண்டதாகவும், அவரது திமிர் பிடித்த மற்றும் அச்சுறுத்தும் செயல்பாட்டால் தான் மிகவும் பாதிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

பொதுவாக இந்த பிரச்சனைகள் குறித்து நான் ட்வீட் செய்வதில்லை, ஆனால் இது உண்மையிலே பயங்கரமாக இருந்தது" என பதிவிட்டுள்ளார். இவர் நேரடியாக குற்றச்சாட்டு வைத்துள்ள சம்பவம், தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
Listen News!