• Jul 25 2025

பாக்ஸிங் கற்கும் பூஜா! பயிற்றுவிப்பாளர் யார் தெரியுமா? வைரல் வீடியோ இதோ!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

2012 ஆம் ஆண்டு இயக்குநர் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பூஜா ஹெக்டே.

துளு நாட்டின் உடுப்பி மாவட்டத்தை பூர்வீகமாகக் கொண்ட  இவர் தெலுங்கு, தமிழ், இந்தி படங்களில் நடித்து பான் இந்திய அளவில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.தெலுங்கில் ஒக லைலா கோஷம் படத்தின் மூலம் பிரபலமானவர்.

சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் நடிகைகளில் மிகவும் முக்கியமான நடிகை. 22.6 மில்லியனுக்கும் அதிகமான ரசிகர்களை பெற்ற இன்ஸ்டாகிராம் கணக்கு உடையவர்.

சில மாதங்களுக்கு முன் நடிகை பூஜா ஹெக்டே,  வெளிநாட்டிற்கு குடும்பத்துடன் சுற்றுலா சென்றார். 3 கண்டங்களில் 4 நகரங்களில் சுற்றுலாவை முடித்து விட்டு மீண்டும் சல்மான் கான் நடிக்கும் "கிஷி கா பாய் கிஷி கி ஜான்"  படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

இந்நிலையில் நடிகை பூஜா ஹெக்டே, பாக்ஸிங் கற்றுக் கொள்ளும் புகைப்படங்களை அவருடைய பயிற்சியாளர் ரோகித் வெளியிட்டுள்ளார்.

 அவ்வப்போது பூஜா ஹெக்டே பாக்ஸிங் பயிற்சி எடுப்பது வழக்கம். இந்நிலையில் ரோகித், தமது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பூஜாவுக்கு பாக்ஸிங் கற்றுக் கொடுக்கும் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.இது தற்போது செம வைரலாகி வருகின்றது.



Advertisement

Advertisement