• Jul 25 2025

''பூங்குழலி கெட்டப் எனக்கு செட் ஆகல'' ; ''ரொம்ப கஸ்டப்பட்டேன்''...மனம் திறந்த ஐஸ்வர்யா லக்‌ஷ்மி!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

 கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் நாவலை பலரும் படமாக்க முயற்சித்த நிலையில், கடைசியாக இயக்குநர் மணிரத்னம் அந்த கனவை நிறைவேற்றினார்.கடந்த ஆண்டு பொன்னியின் செல்வன் முதல் பாகம் வெளியான நிலையில்,  சியான் விக்ரம்,  ஜெயம் ரவி,  கார்த்தி, ஐஸ்வர்யா ராய்,  த்ரிஷா, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி, சோபிதா துலிபாலா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருந்தது ரசிகர்களை மிகவும் கவர்ந்தது.

அதிலும், சமுத்திரகுமாரி பூங்குழலி கதாபாத்திரத்தில் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி படு கவர்ச்சியான உடையில் நடித்து மணிரத்னம் படத்தில் இப்படியொரு கவர்ச்சியா என ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தினார்.

படு ஜோராக நடக்கும் ப்ரொமோஷன்: பொன்னியின் செல்வன் ப்ரொமோஷனை லைகா ஆரம்பிக்கவில்லையே என ரசிகர்கள் கடந்த மாதம் கத்தி கூப்பாடு போட்டு வந்த நிலையில், கோவை, டெல்லி, சென்னை என பல இடங்களுக்கு பறந்து பறந்து படக்குழுவினர் ப்ரொமோஷன் செய்து வருகின்றனர்.

சியான் விக்ரம், த்ரிஷா, கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மற்றும் சோபிதா துலிபாலா உள்ளிட்ட 5பேர் ஜாலி டூர் போல நெருங்கிய நண்பர்களாக ஒவ்வொரு இடத்துக்கும் சென்று லூட்டி அடித்து வருகின்றனர்.கோவையில் பேசிய ஐஸ்வர்யா லக்‌ஷ்மி: சமீபத்தில் கோவையில் நடைபெற்ற ப்ரொமோஷனல் டூர் வீடியோவை லைகா தனது யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. ஜெயம் ரவி, சியான் விக்ரம், கார்த்தி, த்ரிஷா மற்றும் ஐஸ்வர்யா லக்‌ஷ்மி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

என் ஊரு இங்க இருந்து ரொம்ப பக்கம் தான். நான் கேரளத்துப் பொண்ணு, மற்ற படங்களை விட பூங்குழலியாக நடித்த நிலையில், பொன்னியின் செல்வன் படத்துக்கு மிகப்பெரிய வரவேற்பை நீங்க கொடுத்திருப்பது மகிழ்ச்சி என்றார்.பூங்குழலி கெட்டப்பில் சிக்கல்: விஜே அஞ்சனா தான் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். பூங்குழலி கெட்டப் எப்படி போட்டீங்க, நாங்க பார்க்கும் போது, உங்களுக்கு ரொம்ப comfortable-ஆ இருந்தது போல இருந்தது என்றார்.

உடனடியாக அவருக்கு நோஸ் கட் கொடுக்கும் விதமாக comfortable-ஆகவே இல்லை. ரொம்பவே கஷ்டப்பட்டுத் தான் அந்த கதாபாத்திரத்தில் கவர்ச்சிகரமாக நடித்தேன். ஆடை இயக்குநர்கள் ரொம்பவே சிரமப்பட்டு ஒவ்வொரு விஷயத்தையும் ஆராய்ச்சி செய்து அந்த கெட்டப்பை உருவாக்கி இருந்தனர் என்று கூறியது ரசிகர்களை ஷாக் ஆக்கி உள்ளது.

ஐஸ்வர்யா லக்‌ஷ்மி மனதை கவர: பூங்குழலியை விட்டு வெளியே வாங்க, ஐஸ்வர்யா லக்‌ஷ்மியை கல்யாணம் பண்ணிக்க என்ன தகுதி வேண்டும் என விஜே அஞ்சனா அங்கிருந்து ரூட்டை மாற்ற, நல்ல மனசு இருந்தா போதும் என ஒரே வார்த்தையில் பொசுக்குன்னு சொல்லி விட்டார்.

கோவைக்காரங்க மனசு எல்லாமே நல்ல மனசு தான். ஐஸ்வர்யா லக்‌ஷ்மிக்கு அப்ளிகேஷன் போட்டால் நல்லது நடக்கும் என பேசி விஜே அஞ்சனா அந்த மேடையை கலகலப்பாக மாற்றினார்.

கார்கி, கட்டா குஸ்தி, பொன்னியின் செல்வன் என தொடர்ந்து ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் படங்கள் ஹிட் அடித்து வரும் நிலையில், ஏப்ரல் 28ம் தேதி பொன்னியின் செல்வன் 2 வெளியாகிறது. இந்த படத்தில் அருள்மொழி வர்மனை காதலிக்கும் பெண்ணாக அவர் நடித்துள்ளார்.

Advertisement

Advertisement