• Jul 24 2025

விஜய் உடன் சேர்ந்து நடிக்க அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய சொன்னார்கள்... பகீர் கிளப்பிய பிரபல நடிகை..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி வருகிறது. பல நடிகர், நடிகைகளும் தங்களுக்கு நிகழ்ந்து அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து வெளிப்படையாக பேசத் தொடங்கி விட்டனர். இந்நிலையில் மற்றுமோர் நடிகையும் அட்ஜெஸ்ட்மென்ட் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.


அந்தவகையில் தமிழ் சினிமாவில் தங்கை கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை பாலாம்பிகா. இவர் 'பாலம்' என்ற படத்தில் முரளிக்கு தங்கையாக நடித்து அதன் வாயிலாகாவே தமிழில் அறிமுகமானார். குறிப்பாக இப்படத்தில் கண் தெரியாத தங்கையாக நடித்து இருப்பார். இதனைத் தொடர்ந்து குஷ்பு, விஜயகாந்த், சத்யராஜ் ஆகியோருக்கு தங்கையாகவும் ஒரு சில படங்களில் நடித்து அசத்தி இருக்கின்றார்.

இவ்வாறாக படங்களில் தங்கை கதாபாத்திரமே கிடைத்த நிலையில் நாயகியாக நடிக்க வாய்ப்பு இவருக்கு கிடைக்கவில்லை. அவ்வாறு நாயகியாக விஜய், அஜித், கமல், பிரசாந்த் உள்ளிட்டோர்களில் நடிக்க வேண்டும் ஆனால் அட்ஜெஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டதாக கூறி பகீர் கிளப்பியுள்ளார். 


இதுகுறித்து நடிகை பாலாம்பிகை அளித்துள்ள பேட்டியில் "அட்ஜெஸ்ட்மெண்ட் செய்தால் விஜய்க்கு ஜோடியாக நடிக்கலாம் என்று சொன்னார்கள். அதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடு இல்லை. அதுவும் இல்லாமல் என் அப்பாவுக்கும் இதில் துளி அளவு கூடி உடன்பாடு இல்லை. இப்படி சென்றால் தான் வாய்ப்பு கிடைக்கும் என்றாம் அந்த வாய்ப்பு நமக்கு தேவையில்லை என அப்பா என்னிடம் உறுதியாக சொல்லிவிட்டார்" என்றார்.

அதுமட்டுமல்லாது அவர்கள் கூறிய படி நான் அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணி விஜய் நான் நடித்திருந்தால் தற்போது என் வாழ்க்கை மாறியிருக்கும்" எனவும் கூறியுள்ளார். அத்தோடு "எனது திருமண வாழ்க்கையும் ஒழுங்காக அமையவில்லை. என்னுடைய கணவர் சரியில்லை. அதனால் திருமண வாழ்க்கையை இடையில் முடித்துக் கொண்டேன்" எனவும் கூறியுள்ளார் நடிகை பாலாம்பிகா.

Advertisement

Advertisement