• Jul 25 2025

பிரபல காமெடி நடிகர் மனோபாலா திடீர் மரணம்... அதிர்ச்சியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விவேக், வடிவேல் பாலாஜி, மயில்சாமி வரிசையில் நம்மை சிரிக்க வைத்த மற்றுமொரு காமெடி நடிகர் தற்போது மரணமடைந்துள்ளார். 

அதாவது நடிகர், இயக்குநர், தயாரிப்பாளர் என பன்முகத் திறமைகளை கொண்டவர் நடிகர் மனோபாலா. அந்தவகையில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய இவர் ரஜினி நடித்த ஊர்க்காவலன், ஆகாய கங்கை உள்ளிட்ட 20 படங்களை இயக்கி இருக்கின்றார்.


இந்நிலையில் இவருக்கு கடந்த ஜனவரி மாதம் ஆஞ்சியோ சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இதனைத் தொடர்ந்து வழக்கம்போல படப்பிடிப்புகளில் கலந்து கொண்டார். இதற்கிடையில் கல்லீரல் பிரச்சினை காரணமாக வீட்டில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் அவர் இன்று உயிரிழந்துள்ளார்.


Advertisement

Advertisement