• Jul 25 2025

சீதாவாக களமிறங்கும் பிரபல சினிமா நடிகை... அடடே இவங்களா..? குஷியில் ரசிகர்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ரோஜா' சீரியல் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பிரியங்கா நல்காரி. ஹைதராபாத்தைச் சேர்ந்த இவர், கடந்த 2010 ஆம் ஆண்டு 'அந்தரி பந்துவயா' என்ற தெலுங்கு படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமானார். ஆனால் இந்த படம் இவருக்கு எதிர்பார்த்த அளவுக்கு வெற்றியை தரவில்லை


இதனை அடுத்து தமிழில் தீயா வேலை செய்யணும் குமாரு, காஞ்சனா 3, போன்ற படங்களில் சிறு கதாபாத்திரங்களில் நடித்தார். தொடர்ந்து சினிமாவில் வாய்ப்புக் கிடைக்காத காரணத்தினால் தான் சின்னத்திரையில் அறிமுகமாகினார்.


அந்தவகையில் 'ரோஜா' சீரியலைத் தொடர்ந்து ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் 'சீதா ராமன்' என்கிற சீரியலில் நடித்து வருகிறார். இவர் அண்மையில் தனது கணவருக்காக சீரியலில் இருந்து விலகுவதாக அறிவிக்கப்பட்டார். இதனையடுத்து ஸ்ரீநிதி இனி சீதாவாக நடிக்க போகிறார் என தகவல் வெளியானது. ஆனால் கடைசியில் அது உண்மை இல்லை என அவரே விளக்கம் அளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது இந்த சீரியலில் தமிழ் சினிமாவில் சூப்பர் ஹிட் ஆன படத்தில் நாயகியாக நடித்து பாராட்டுகளை பெற்ற இளம் நடிகை ஒருவர் தான் சீதாவாக களமிறங்கப் போவதாக ஏற்கெனவே தகவல் வெளியானது. அதாவது புதிய சீதாவாக 'மிக மிக அவசரம்' பட நடிகை ஸ்ரீ பிரியங்கா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.


Advertisement

Advertisement