• Jul 25 2025

பிரபல மலையாள நடிகர் காலமானார்- இரங்கல் தெரிவிக்கும் திரையுலகம்

stella / 2 years ago

Advertisement

Listen News!

மலையாள திரையுலகின் பழம்பெரும் நடிகர்களில் ஒருவாக இருப்பவர் தான் பூஜப்புரா ரவி. 1936ம் ஆண்டு பிறந்த இவர் தனது இளம் வயது முதலே நடிப்பில் மிக ஆர்வமாக இருந்துள்ளார். இதனால் ஆரம்ப காலங்களில் ஏராளமான மேடை நாடகங்களில் நடித்து பிரபலமானார். அதன்பின்னர் கறுப்பு வெள்ளை சினிமாவில் நடிக்கத் தொடங்கிய பூஜப்புரா ரவி 2016ம் ஆண்டு வரையிலும் நடித்துள்ளார்.

காமெடி காட்சிகளில் நடித்து புகழ்பெற்ற பூஜப்புரா ரவிக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதுவரை சுமார் 800க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளதோடு ஏராளமான விருதுகளையும் வென்றுள்ளார். கல்லன் கப்பலில் தானே, ரவுடி ராமு, ஓர்மகள் மரிக்குமோ?, அம்மினி அம்மாவன், முத்தாரம் குன்னு பிஓ, பூச்சக்கொரு மூக்குத்தி, லவ் இன் சிங்கப்பூர், ஆனக்கொரும்மா, நந்தி விழுந்து வரிக, மழை பெய்யுன்னு. மாடலம் கொட்டுன்னு, கடடநாடன் அம்பாடி, மஞ்சாடிக்குரு ஆகியவை பூஜப்புரா ரவி நடித்த முக்கியமான படங்களாகும்.


 ரவிந்திர நாயர் என்ற இயற்பெயருடைய இவர் திருவனந்தபுரம் அருகேயுள்ள பூஜப்புரா ஊரில் பிறந்துள்ளார். மேடை நாடகத்தில் நடித்தபோது 'ரவி' என்ற பெயரில் பிரபலமான இவர், அவரது ஊரின் பெயருடன் 'பூஜப்புரா ரவி' என ரசிகர்கள் மனதில் இடம்பெற்றுவிட்டார்.

இந்நிலையில், கடந்த சில வருடங்களாக இடுக்கியில் உள்ள தனது மகள் வீட்டில் வசித்து வந்துள்ளார் பூஜப்புரா ரவி. வயது மூப்பு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்த அவர், இன்று காலமானார். இவரது இறப்பு திரையுலகில் பெரும் அதிர்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement