• Jul 26 2025

Bigg Boss Season 7-இல் பிரபல ஆண் செய்தி வாசிப்பாளர்..யார் தெரியுமா?அட இவங்க தானா?

Jo / 1 year ago

Advertisement

Listen News!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மிக முக்கியமான ரியாலிட்டி ஷோக்களில் பிக்பாஸ் நிகழ்ச்சியும் ஒன்று. இதுவரை 6 சீசங்கள் வெற்றிகரமாக முடிவடைந்த நிலையில், தற்போது 7வது சீசன் எப்போது தொடங்கும் என ரசிகர்கள் ஆவலாக காத்திருக்கின்றனர்.

இந்த நிலையில் வரும் செப்டம்பர் மாதம் தொடக்கத்தில் பிக்பாஸ் சீசன் 7 தொடங்கும் எனவும், இந்த முறையும் உலகநாயகன் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்குவார் என கூறப்படுகிறது.


இதனையடுத்து பிக்பாஸ் சீசன் 7ல் பங்கிற்கும் போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இந்த சீசனில் பிரபல செய்தி வாசிப்பாளர் ரஞ்சித் பங்கேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 


இப்படியான நிலையில் பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சியின் அப்டேட் இன்று வெளியாகியுள்ளது.கடந்த சீசனில் ஆரம்பிக்கலாமா என அலப்பறை கொடுத்த கமல்ஹாசன், நிசப்தமான கடலின் நடுவே நின்று கொண்டு பிக்பாஸ் சீசன் விரைவில் என அப்டேட்டை கொடுத்துள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சி அடுத்த மாதம் முதல் வாரத்தில் தொடங்கி ஜனவரி மாதம் வரை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.




Advertisement

Advertisement