• Jul 25 2025

குடும்பத்துடன் புத்த மதத்திற்கு மாறிய பிரபல வில்லன் நடிகர்- அதிர்ச்சியில் அவரது ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் வெளியான விருமாண்டி திரைப்படத்தில் ஜெயில் வார்டனாக நடித்து அறிமுகமாகியவர் தான் தீனா. இவர் இதனைத் தொடர்ந்து கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்தர வேடங்களிலும் வில்லன் கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.

குறிப்பாக எந்திரன், ராஜா ராணி, தெறி, மாநகரம், மெர்சல், வட சென்னை, பிகில், மாஸ்டர், எதற்கும் துணிந்தவன் உள்ளிட்ட படங்களில் நடித்ததைக் கூறலாம்.நடிப்பையும் தாண்டி தீனாவின் பேச்சுக்கு பல ரசிகர்கள் இருக்கிறார்கள். மனதில் உள்ளதை வெளிப்படையாக பேசுபவர் இவர்.


 கொரோனா வைரஸ் பாதிப்பினால் வாழ்வாதாரத்தை இழந்து அன்றாடம் கஷ்டப்பட்ட மக்களுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்தார்.வில்லன் என்பவன் படத்தில் மட்டும் தான், நிஜத்தில் இல்லை என்பதற்கு ஏற்றவாறு தீனாவின் பேச்சுகளில் சமூகத்தின் மீதான அக்கறை தெறிக்கும்.

இந்நிலையில் தற்போது அவர் தனது குடும்பத்தினருடன் புத்த மதத்தை தழுவியுள்ளார். பிக்கு மௌரியா அவர்கள் முன்னிலையில் 22 உறுதிமொழிகள் ஏற்று குடும்பத்துடன் புத்த மதம் மாறியுள்ளார் தீனா. அந்தப் படங்கள் இணையத்தில் வெளியாகி கவனம் பெற்று வருகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement