• Jul 25 2025

நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் போட்டியிடுகிறாரா..? மதுரையில் ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களால் பரபரப்பு..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' படத்தில் நடித்து வருகின்றார். இப்படத்தின் ஷுட்டிங் தற்போது சென்னையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது . மேலும் இப்படம் அக்டோபர் மாதம் ரிலீஸாகவுள்ளது.

இவ்வாறு படப்பிடிப்பில் பிஸியாக இருக்கும் விஜய் குறித்து அடிக்கடி அரசியல் குறித்த தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்றது. அதாவது விஜய் விரைவில் அரசியலுக்கு வரப்போகிறார் எனக் கூறப்படுகின்றது. அதற்கு ஏற்றாற்போல் சில அரசியல் சார்ந்த விஷயங்களையும் அவர் சமீபகாலமாக தன்னுடைய மக்கள் இயக்கத்தின் மூலம் தீவிரமாக செய்து வருகிறார்.


இதனால் கண்டிப்பாக விஜய் 2026ஆம் ஆண்டு அரசியல் கட்சி எனப் பலராலும் எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது நடிகர் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு "2024 பாராளுமன்றமே 2028-இன் சட்டமன்றமே" என்ற வாசகங்களுடன் "விரைவில் மதுரையில் மாநாடு" என்று குறிப்பிட்டு மதுரை முழுவதிலும் விஜய் மக்கள் இயக்கத்தினர் சரா்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளமை ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


அந்தவகையில் விஜய் மக்கள் இயக்கத்தினர் சார்பில் ஒட்டப்பட்டுள்ள இந்தப் போஸ்டர்கள் மூலமாக விஜய் மதுரையில் மாநாடு நடத்தக்கூடியதாக கருத்துக்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மதுரை நாடாளுமன்ற தொகுதியில் விஜய் போட்டியிடுகிறாரா? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மற்றும் பொதுமக்கள் இடையே எழுந்துள்ளது. 


எனவே வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் விஜய் மக்கள் இயக்கத்தினர் தனித்து களம் காண்கின்றனரா?  இல்லையெனில் ஏதேனும் அரசியல் கட்சிகளுடன் கூட்டணி அமைத்து போட்டியிட உள்ளனரா?  என்ற கேள்வியும் பலரிடையும் எழுந்துள்ளது. இவ்வாறாக தமிழ் சினிமாவில் கொடிகட்டி பறந்து வரும் விஜய் திடீரென அரசியல் பிரவேசத்தை தொடங்கியுள்ளமை அரசியல் ஆர்வலர்களிடையே  பல்வேறு எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி உள்ளமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement