• Jul 25 2025

ஆதிபுருஷ் படத்திற்கு நெகடிவ் விமர்சனம் கூறிய நபர்... தாக்குதல் நடத்திய பிரபாஸ் ரசிகர்கள்... திரையரங்கில் நடந்த பரபரப்பு சம்பவம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

ஓம் ராவுத் இயக்கத்தில் பிரபாஸ், கிருத்தி சனோன், சைஃப் அலி கான் ஆகியோர் நடிப்பில்  இன்றைய தினம் வெளியாகியுள்ள திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படத்தைப் பார்த்த ரசிகர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்த வண்ணமே இருக்கின்றனர். அந்தவகையில் இப்படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வந்து குவிகின்றன.


இந்நிலையில் ரசிகர் ஒருவர் திரையரங்கு ஒன்றில் ஆதிபுருஷ் படத்தை பார்த்துவிட்டு வரும்போது வெளியில் நின்றிருந்த பத்திரிகையாளர்களிடம் ஆதிபுருஷ் படம் குறித்து நெகடிவ் விமர்சனத்தை கூறினார். அதாவது "படத்தில் பின்னணி இசை உள்ளிட்டவைகள் நன்றாக இருக்கின்றன. ஆனால் கிராஃபிக்ஸ் காட்சிகள் நன்றாக இல்லை. ப்ளே ஸ்டேஷன் கிராஃபிக்ஸ்கூட நன்றாக இருக்கும்" என கூறி இருந்தார்.


இதனையடுத்து அந்த சமயத்தில் அங்கிருந்த ஆதிபுருஷ் ரசிகர்கள் அவரை மிகவும் கடுமையாக தாக்கி உள்ளனர். இந்த சம்பவமானது பரபரப்பை ஏற்படுத்தி இருப்பதோடு இதற்குப் பலரும் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement