• Jul 25 2025

என் திருமணம் இங்கு தான் நடைபெறும்... கிருத்தி சனோனை அருகில் வைத்து பிரபாஸ் பகிர்ந்த தகவல்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தென்னிந்திய சினிமாவில் புகழ்பெற்ற நடிகர்களில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் நடிகர் பிரபாஸ். இவர் எஸ்.எஸ் ராஜமௌலி இயக்கத்தில் உருவான 'பாகுபலி' என்ற படத்தின் வாயிலாக முழு உலகையும் திரும்பிப் பார்க்க வைத்தார். இப்படத்தில் இவருடன் இணைந்து அனுஷ்காவும் நடித்திருந்தார். இப்படத்தில் பிரபாஸ் மற்றும் அனுஷ்காவிற்கும் பார்ப்பதற்கு ரியல் ஜோடி போன்று நல்ல பொருத்தம் இருந்தது. இதனைத் தொடர்ந்து அந்த படத்தில் நடித்த போது இருவரும் காதலித்ததாகக் கூட ஒரு தகவல் பரவியது.


இதனையடுத்து தற்போது பிரபாஸ் இயக்குநர் ஓம் ராவுத்தின் 'ஆதிபுருஷ்' என்ற படத்தில் ராமராக நடித்துள்ளார். இப்படம் ஜூன் 16-ஆம் தேதி வெளியாக உள்ளது. இதில் சீதையாக நடிகை கிருத்தி சனோன் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் காதலித்து வருவதாகவும் சமீபத்தில் கிசுகிசுக்கள் வெளியாகி வந்தன.


இந்நிலையில் ஆதிபுருஷ் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் திருப்பதியில் நேற்று பிரம்மாண்டமாக நடைபெற்றிருந்தது. அதில் தனது திருமணம் குறித்த முக்கிய அறிவிப்பை பிரபாஸ் வெளியிட்டு இருக்கின்றார். அந்நிகழ்வில் ரசிகர் ஒருவர் எப்போது திருமணம் செய்துகொள்ளப்போகிறீர்கள் என கேள்வி எழுப்பினார். 

இதற்கு பிரபாஸ் "கல்யாணம் என்றாவது ஒரு நாள் நடக்கும். ஆனால் கண்டிப்பாக திருப்பதியில் தான் என்னுடைய திருமணம் நடக்கும்" பதிலளித்தார். அந்த சமயத்தில் நடிகை கிருத்தி சனோனும் அவர் அருகில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement