• Jul 24 2025

Pradeep கிட்ட ஒரு Strategy இருக்கு",ஹவுஸ்மேட்ஸ் நினைக்கிற மாதிரி இல்ல- ஓபனாகப் பேசிய வனிதா விஜயகுமார்

stella / 1 year ago

Advertisement

Listen News!

பிக் பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி முதல் வாரத்திலேயே மிகப்பெரிய விவாதத்தை சமூக வலைதளங்களில் கிளப்பிய நிலையில், அதிரடியாக ஒரு எவிக்‌ஷன் மற்றும் ஒரு வாக்கவுட் என அட்டகாசமான துவக்கத்தை ஆரம்பித்துள்ளது. 

முதல் வாரத்தில் எவிக்‌ஷன் இருக்காது என நம்பிக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு 18 பேர் இருந்த வீட்டில் தற்போது வெறும் 16 பேர் தான் இருக்கின்றனர் என்பதே ஷாக்கிங் செய்தி தான்.முதல் வாரத்தில் பிக் பாஸ் வீட்டில் எந்தவொரு டாஸ்க்கும் செய்யாமலே டாட்டூ போட்ட அந்த அனன்யா ராவ் விசித்ராவுடன் சர்ச்சையில் எல்லாம் சிக்கி முகத்தை காட்டிய நிலையிலும், ரசிகர்களுக்கு அவர் எந்தவொரு சீரியலிலும் நடிக்காத நிலையில், அவரை துரத்தி அடித்து விட்டனர்.


அவரைத் தொடர்ந்து நெஞ்சு வலிக்கின்றது போல இருப்பதாகக் கூறி பாவா செல்லத்துரை நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார். இந்த நிலையில் இந்த வாரம் யார் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறுவார் என்ற எதிர்பார்ப்பானது ரசிகர்களிடம் அதிகமாகக் காணப்படுகின்றது.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சி,குறித்த ரிவியூவை வனிதா கொடுத்து வருவதுண்டு. அந்த வகையில் தற்பொழுது பிரதீப் குறித்து வனிதா கூறியுள்ளார். அதாவது பிரதீப்பை எல்லோரும் பைத்தியக்காரன் என்று நினைக்கின்றார்கள். ஆனால் அவர் கிட்ட ஒரு Strategy இருக்கு" ஹவுஸ்மேட்ஸ் நினைக்கிற மாதிரி இல்லை என்று தெரிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement