• Jul 24 2025

கடுமையான அரியவகை நோயினால் பாதிக்கப்பட்ட பிரின்ஸ் பட இயக்குநர்- அடக் கடவுளே இது என்ன புதுசா இருக்கு

stella / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் அண்மையில் வெளியாகியிருந்த திரைப்படம் தான் பிரின்ஸ். இப்படத்தை தெலுங்கு இயக்குநரான அனுதீப் குமார் இயக்கியிருந்தார்.காமெடியை மட்டுமே மையமாக வைத்து எடுக்கப்பட்ட இந்த படம், ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களையே பெற்றது.

புதுச்சேரியில் அமைந்துள்ள, மேல்நிலைப் பள்ளி சமூக அறிவியல் ஆசிரியராக பணிபுரியும் சிவகார்த்திகேயன், அதே பள்ளியில் ஆங்கில ஆசிரியையாக இருக்கும் பிரிட்டிஷ் பெண்ணான  மரியா ர்யபோஷாப்கா மீது காதல் கொண்டு... அவரை திருமணம் செய்ய முயற்சிப்பதை மிகவும் காமெடியாக இயக்கி இருந்தார் அனுதீப் குமார்.


இந்நிலையில் இந்த படத்தின் இயக்குநர் தனக்கு இருக்கும், அரியவகை நோய் குறித்து முதல் முறையாக வெளிப்படையாக தெரிவித்துள்ளார். அதாவது இவருக்கு Highly Sensitive Person என்ற நோய் பாதிப்பு உள்ளதாம்.


இந்த அரியவகை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், காபி குடித்தால்... இரு தினங்களுக்கு தூங்க முடியாதாம். ஆப்பிள் ஜூஸ் குடித்தால் மூளையே சுத்தமாக செயல்படாமல் போய்விடுமாம். அதிக ஒளி, அதிக நெடி, போன்றவற்றை இவர்களால் ஏற்றுக்கொள்ளவோ, அந்த சூழலில் சுவாசிக்கவோ முடியாது என தெரிவித்துள்ளார். அந்த தகவல் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement