• Jul 26 2025

பாலிவூட்டில் என்ரியாக இருக்கும் கைதி பட வில்லன் நடிகர்- அட இவருடைய குரல் இதுக்கு ஒத்துவருமா?

stella / 3 years ago

Advertisement

Listen News!

கார்த்தி நடிப்பில் வெளியான கைதி திரைப்படத்தில் "அன்பு" என்ற கதாபாத்திரத்தில் நடித்து மிகவும் பிரபலமானவர் நடிகர் அர்ஜுன் தாஸ். இவர் தனது முதல் படத்திலேயே அதிகமான ரசிகர்களை கொண்டுள்ளார்.

தொடர்ந்து தளபதியின் மாஸ்டர் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். தொடர்ந்து இவர் நடித்த அந்த படமும் நல்ல கவனத்தைப் பெற்றது. சமீபத்தில் ரிலீசான விக்ரம் படத்தில் கூட அவர் ஒரு சிறப்பு வேடத்தில் நடித்திருந்தார்.

தற்போது வசந்தபாலன் இயக்கும் அநீதி படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். அத்தோடு வில்லனுக்கேற்றது போல கம்பீரக் குரல் கொண்டவர் என்பதும் முக்கியமாகும்.

இந்நிலையில் மலையாளத்தில் இயக்குநர் ஹரி இயக்கத்தில் உருவான திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது அந்தப் படத்தை பாலிவுட்டில் ரீமேக் செய்ய இருப்பதாகவும் அதில் அர்ஜுன் கதாநாயகனாக நடிப்பதாக கூறப்படுகிறது. அந்தப் படத்தை கேடி என்கிற கருப்பு துரை இயக்குகிறார். படம் குறித்த கூடுதல் தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது

பிற செய்திகள்

சமூக ஊடகங்களில்:

Advertisement

Advertisement