• Jul 26 2025

சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய பிரித்விராஜ்..! வலியுடன் போராடி மீண்டு வருவேன் என உறுதி..!

Jo / 2 years ago

Advertisement

Listen News!

நடிகர் பிரித்விராஜ் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழ், தெலுங்கு என தென்னிந்திய மொழிப்படங்களிலும் இந்தியிலும் நடித்து வருகிறார். தமிழில் இவர் ஹீரோவாகவும் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர். 

இந்நிலையில் தற்போது பிரித்விராஜ் விளாயத் புத்தா என்ற படத்தில் நடித்து வந்தார். ச இந்தப் படத்தின் சூட்டிங் கொச்சியில் உள்ள மறையூரில் கடந்த சில தினங்களுக்கு நடைபெற்றது. இதில் ஆக்ஷன் காட்சியில் நடித்தபோது பிரித்விராஜிற்கு விபத்து ஏற்பட்டு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. இதையடுத்து கொச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

அவரது காலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. இதையடுதது சில தினங்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில், தற்போது அவர் வீடு திரும்பியுள்ளார். அவர் இரண்டு மாத காலங்கள் ரெஸ்ட் எடுக்க வேண்டும் என்று மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர். மேலும் அவருக்கு பிசியோதெரபி சிகிச்சையும் செய்யப்பட உள்ளது. இந்நிலையில் இந்த இரண்டு மாத காலங்களை தான் ஆக்கப்பூர்வமாக செலவழிப்பேன் என்று பிரித்விராஜ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

மேலும் தான் முழுமையாக குணமடையவும் விரைவில் செயலில் இறங்கவும் தேவையான அனைத்தையும் தான் செய்வேன் என்றும் வலியுடன் போராடி மீண்டு வருவேன் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். இந்த நேரத்தில் தன் மீது அன்பையும் அக்கறையையும் செலுத்திய அனைவருக்கும் நன்றிகளையும் அவர் தெரிவித்துக் கொண்டுள்ளார். 

Advertisement

Advertisement