• Jul 25 2025

நரிக்குறவ பெண்ணுக்கு ஆதரவாக பேசி.. ரோஹிணி தியேட்டரை விளாசிய ப்ரியா பவானி சங்கர்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

சிம்பு நடித்த 'பத்து தல' படம் நேற்றைய தினம் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. இதனையடுத்து சிம்புவை திரையில் பார்ப்பதற்காக தமிழ்நாடு முழுவதும் பத்து தல ரிலீஸான திரையரங்குகள் முன் ரசிகர்கள் கூட்டமாக குவிந்தனர்.


அந்தவகையில் சென்னையில் இருக்கும் பிரபல திரையரங்கமான ரோகிணி திரையரங்கத்திலும் பத்து தல படம் திரையிடப்பட்டது. அதில் காலை 8 மணி காட்சியை பார்க்க நரிக்குறவர் இனத்தை சேர்ந்த இரண்டு பெண்களும், ஒரு சிறுவனும் சென்றிருந்தனர். 


ஆனால் அவர்களிடம் படத்துக்கான டிக்கெட் இருந்தும் தியேட்டருக்குள் அனுமதிக்க ஊழியர் ஒருவர் மறுத்துவிட்டார். இதுதொடர்பான வீடியோ நேற்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை கிளப்பியது.


இந்நிலையில் பத்து தல படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ப்ரியா பவானி சங்கர் இந்த விவகாரம் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார். அதாவது "எல்லாரும் அவங்க வேலைய பார்த்துட்டுப் போறப்போ, ticket இருக்ககுல்ல, ஏன் உள்ள விட மாட்டேங்கிறீங்கன்னனு கேட்ட அந்த குரல் தான் இது போன்ற செயலுக்கு எதிரான முதல் குரல். அவங்க உடைதான் திரையரங்க நிர்வாகிகளுக்கு பிரச்சனைனா, அவர்கள் அறிய, அடைய வேண்டிய நாகரிகம் ரொம்ப தூரத்துல இருக்கு" என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement