• Jul 25 2025

எஸ்.ஜே சூர்யாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்து ரசிகர்களை சூடாக்கிய பிரியா பவானி ஷங்கர்- வெளியாகிய வீடியோவால் அதிர்ச்சியில் உறைந்த ரசிகர்கள்

stella / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் வாலி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகியவர் தான்  எஸ்.ஜே சூர்யா. இதனைத் தொடர்ந்து குஷி எனப் பல திரைப்படங்களை இயக்கியிருந்தார். இதனை அடுத்து தற்பொழுது ஹீரோ, வில்லன், காமெடி, சைக்கோ என பல கேரக்டர்களில் நடித்து வருகின்றார்.தமிழில் மட்டுமல்லாது தெலுங்கிலும் பிஸியாக நடித்து வருகின்றார்.

இந்நிலையில், அவர் நடித்துள்ள பொம்மை திரைப்படம் ஜூன் 16ம் தேதி வெளியாகவுள்ளது. மொழி, அபியும் நானும், பயணம் போன்ற படங்கள் மூலம் பிரபலமான ராதாமோகன், பொம்மை படத்தையும் இயக்கியுள்ளார். இதில் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளனர். முன்னதாக மான்ஸ்டர் படத்திலும் எஸ்ஜே சூர்யா ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்திருந்தார்.

இந்நிலையில், நீண்ட நாட்களாக வெளியாகாமல் இருந்த பொம்மை திரைப்படம், வரும் 16ம் தேதி ரிலீஸாகிறது. இதனை முன்னிட்டு இந்தப் படத்தின் இரண்டாவது ட்ரெய்லரை இயக்குநர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். சைக்கோ த்ரில்லர் ஜானரில் உருவாகியுள்ள இந்த ட்ரெய்லர் ரசிகர்கள் மத்தியில் கவனம் ஈர்த்து வருகிறது. முக்கியமாக இந்த ட்ரெய்லரில் எஸ்ஜே சூர்யா - பிரியா பவானி சங்கர் இருவரும் லிப் லாக் செய்துகொள்ளும் காட்சி செம்ம வைரலாகி வருகிறது.


செய்தி வாசிப்பாளர், சீரியல் என தனது கேரியரை தொடர்ந்த பிரியா பவானி சங்கர், மேயாத மான் படத்தில் நாயகியாக அறிமுகமானார். தொடர்ந்து முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேரும் பிரியா பவானி சங்கர், ஹோம்லி லுக்கில் மட்டுமே நடித்து வருகிறார். ஆனால், பொம்மை ட்ரெய்லரில் எஸ்ஜே சூர்யாவுக்கு  லிப் லாக் கொடுத்துள்ளது ரசிகர்களை சூடாக்கியுள்ளது.

ட்ரெய்லரிலேயே லிப் லாக் சீன் என்றால், படத்தில் இன்னும் தரமான சம்பவங்கள் இருக்குமா என பேசி வருகின்றனர். மான்ஸ்டர் படத்தில் நடித்தது முதலே எஸ்ஜே சூர்யாவுடன் நெருக்கம் காட்டி வருகிறார் பிரியா பவானி சங்கர். சில மாதங்களுக்கு முன்னர் எஸ்ஜே சூர்யா புதிய BMW கார் வாங்கிய போதும் பிரியா பவானி சங்கர் தான் உடனிருந்தார். பிரியா பவானி சங்கர் இதுவரை மற்ற நடிகர்களுடன் லிப் லாக் காட்சிகளில் நடித்தது கிடையாது என்பதும் குறிப்பிடத்தக்கது.



Advertisement

Advertisement