• Jul 24 2025

கார் விபத்தில் சிக்கிய பிரபல நடிகை உயிரிழப்பு- கடும் சோகத்தைத் தெரிவித்த ப்ரியங்கா சோப்ரா

stella / 2 years ago

Advertisement

Listen News!

கடந்த வாரம் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கார் விபத்தில் சிக்கிய ஹாலிவுட் நடிகை அன்னே ஹெச் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் தற்பொழுது அவர் உயிரிழந்த விட்டதாக மருத்துவமனை வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன.

விபத்தில் சிக்கி உயிரிழந்த நடிகை, அன்னேவின் மூத்த மகன் ஹோமரும் இது குறித்து கூறுகையில், "எனது சகோதரர் அட்லஸும் நானும் எங்கள் அம்மாவை இழந்து விட்டோம். ஆறு நாட்கள் எங்கள் அம்மாவை காப்பாற்ற போராடிய நிலையில் அவர் உயிரிழந்தார். அவரை மிகவும் மிஸ் செய்வதாக உருக்கமாக கூறியுள்ளார். 


இவரது திடீர் மறைவுக்கு, பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் மற்றும் எலன் டிஜெனெரஸ் ஆகியோர் தங்களுடைய சமூக வலைதள பக்கத்தில்  அஞ்சலி செலுத்தினர். பிரியங்கா சோப்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கூறியுள்ளதாவது, "அன்னே ஹெச்சின் மறைவால் வாடும் அவரது பிள்ளைகள் , குடும்பத்தினர், நண்பர்கள் அனைவரும் ஒரு அழகான நபரை இழந்துள்ளோம்.  நீங்கள் எப்போதும் எங்கள் மத்தியில் இருந்து கொண்டு தான் இருக்கிறீர்கள். உங்களுக்கு எப்போதுமே என் இதயத்தில் ஒரு சிறப்பு இடம் உண்டு என கூறியுள்ளார்.


பிரியங்கா சோப்ரா நடித்த ஹாலிவுட் தொடரான, 'குவாண்டிகோ' என்ற தொடரில் ஆனி ஹெச் நடித்திருந்தார் . மேலும் பல பாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து தங்களது இரங்கல்களை தெரிவித்து வருகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Advertisement

Advertisement