• Jul 25 2025

விநாயகர் கோயிலுக்கு குழந்தையுடன் திடீர் விசிட் அடித்த பிரியங்கா சோப்ரா.. வெளியான புகைப்படங்கள்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் சினிமாவில் விஜய் நடிப்பில் வெளியான 'தமிழன்' என்ற படத்தின் வாயிலாக கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. இப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்து அசத்தி இருந்தார். இதன் மூலமாக பல தமிழ் ரசிகர்கள் மனதிலும் நீங்காத இடத்தைப் பிடித்தார். 


இதன் பின்னர் பாலிவுட் பக்கம் சென்ற ப்ரியங்கா சோப்ரா, அங்கு தன்னை விட 10 வயது இளையவரான பாடகர் நிக் ஜோனஸை 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இதனைத் தொடர்ந்து வாடகைத்தாய் மூலம் குழந்தையையும் பெற்றார். 


இந்நிலையில் தற்போது தனது பெண் குழந்தையான மால்டி பிறந்த பின்னர் நீண்ட நாள் கழித்து இந்தியா வந்துள்ளார் ப்ரியங்கா சோப்ரா. அதுமட்டுமல்லாது மும்பையில் பிரசித்தி பெற்ற சித்தி விநாயகர் கோயிலுக்கு குழந்தையுடன் சென்றுள்ளார். 


அங்கு எடுக்கப்பட்ட புகைப்படங்களை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் தங்களது லைக்ஸ்களை அள்ளிக் குவித்து வருகின்றனர்.


Advertisement

Advertisement