• Jul 26 2025

சீரியல் நடிகைக்கு பாலியல் தொல்லை கொடுத்த தயாரிப்பாளர்... அவரே அளித்த பரபரப்பு புகார்...!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இந்தி சினிமாவில் பிரபல நடிகைகளில் ஒருவராகத் திகழ்ந்து வருபவர் ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால். அந்தவகையில் இவர் 'ஹல்லா போல், கிராஸி 4, ஏர்லிபட்' உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்து இருக்கிறார். அதுமட்டுமல்லாது ஒரு சில தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்துள்ளார். 


இந்நிலையில் டி.வி சீரியல் படப்பிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை ஏற்பட்டதாக ஜெனிபர் மிஸ்ட்ரி பரபரப்பு புகார் ஒன்றினைக் கூறியுள்ளார். அதாவது இதுகுறித்து அவர் அளித்துள்ள பேட்டி ஒன்றில் "நான் தாரக் மேத்தா கா ஊல்தா சாஸ்மா என்ற தொடரில் நடித்துக் கொண்டு இருந்த போது பாலியல் தொல்லைகளை எதிர்கொண்டேன்" என்றார்.


அதாவது "அந்த தொடரின் தயாரிப்பாளரான அசித்மோடி மற்றும் அவருடன் இணைந்து இன்னும் இரண்டு பேர் என்னிடம் தவறாக நடக்க முயன்றனர். அவர்களின் ஆசைக்கு என்னை இணங்கும்படி வற்புறுத்தினர். ஆனால் நான் அதற்கு கொஞ்சமும் உடன்படவில்லை.


இருப்பினும் அந்தத் தயாரிப்பாளர் பலமுறை என்னை தன்னுடைய ஆசைக்கு இணங்க அணுகினார். அவர்களுக்கு எதிராக நடந்து கொண்டால் அந்தத் தொடரில் இருந்து என்னை நீக்கி விடுவார்கள் என்று பொறுமையாக இருந்தேன். பின்னர் கடைசியாக வேறு வழி இல்லாமல் அவர்களின் தொல்லை தாங்க முடியாமல் அந்த தொடரில் இருந்து வெளியேறினேன். ஆனாலும் ஒரு சில பெண்கள் அவர்களின் விருப்பங்களுக்கு இணங்கினர். தொடரில் வேலை பார்த்த எல்லோரையும் கொத்தடிமைபோல் அவர்கள் நடத்தினர்'' எனவும் கூறியுள்ளார்.

நடிகை ஜெனிபர் மிஸ்ட்ரி பன்சிவால் உடைய இந்தப் பாலியல் புகாரானது பரபரப்பாகி உள்ளது.

Advertisement

Advertisement