• Jul 26 2025

SURIYA 42 படம் பற்றி சூப்பர் தகவலை கூறிய தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா ...குஷியில் ரசிகர்கள்..!

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

தமிழ் திரையுலகில் முக்கிய நடிகராக திகழ்பவர் தான் நடிகர் சூர்யா. எனினும் சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான சூரரைப் போற்று, ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன்  திரைப்படங்கள், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பினை பெற்றிருந்தது. இதில் சூரரைப் போற்று திரைப்படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் சூர்யா பெற்றார்.

அத்தோடு  நடிகர் கமல்ஹாசன் தயாரித்து நடித்த  'விக்ரம்' திரைப்படத்தில் ரோலக்ஸ் எனும் சிறப்பு கேமியோ பாத்திரத்தில் நடித்திருந்தார் சூர்யா.

தற்போது சூர்யா,   சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா 42 திரைப்படத்தில் நடித்து வருகிறார்.  சிறுத்தை சிவா திரைப்படத்தின் படப்பிடிப்பு முழு வீச்சில் நடைபெற்று வருகின்றது.

சில மாதங்களுக்கு முன் இந்த படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அதில் இந்த படம் 10 மொழிகளில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அத்தோடு  முப்பரிமாண முறையில் 3டி தொழில்நுட்பத்தில் இந்த படம் உருவாகும் எனவும் கூறப்பட்டுள்ளது.

'ஒரு வலிமைமிக்க வீரம் மிக்க கதை' என்ற வாசகத்துடன் மோஷன் போஸ்டர் வெளியானது குறிப்பிடத்தக்கது.அத்தோடு இந்த படத்தில் ஒளிப்பதிவாளராக வெற்றி பழனிச்சாமி பணிபுரிகிறார். கலை இயக்குநராக மிலன் பணிபுரிகிறார். வசனங்களை மதன் கார்க்கி எழுதி உள்ளார்.

இப்படத்தின் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் பணிபுரிய இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  சுப்ரீம் சுந்தர் சண்டை காட்சி இயக்குனராக பணிபுரிகிறார். மிலன் கலை இயக்குனராக பணிபுரிகிறார். எடிட்டராக நிஷாத் யூசுப் பணிபுரிகிறார்.

இவ்வாறுஇருக்கையில்  பிரத்யேக பேட்டி ஒன்றை தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா  தனியார் ஊடகம் ஒன்றிற்கு பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார். அதில் சூர்யா 42 படம் குறித்த பல தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி, "சூர்யா 42 திரைப்படத்தின் டீஸர் தயாராகி விட்டது. மே மாதம் டீஸர் வெளியாகும் என்றும், டைட்டில் மற்றும் ரிலீஸ் தேதி அறிவிப்பு இன்னும் இரண்டு வாரத்தில் அறிவிக்கப்படும். மே மாதம் வெளியாகும் டீஸர் வந்த உடன் படத்தின் பிரம்மாண்டம் ரசிகர்களுக்கு தெரியவரும்." என தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா கூறினார்.

Advertisement

Advertisement