• Jul 25 2025

ஃபர்ஹானா சர்ச்சைக்கு தயாரிப்பாளர் வெளியிட்ட அறிக்கை

Aishu / 2 years ago

Advertisement

Listen News!

ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து இருக்கும் ஃபர்ஹானா படத்தின் ட்ரைலர் வெளியானதில் இருந்து அதற்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இருப்பினும் படத்தில் சர்ச்சையாக எதுவும் இல்லை என படக்குழு தெரிவித்து வருகின்றனர்.

இவ்வாறுஇருக்கையில்  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தற்போது அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

ஃபர்ஹானா திரைப்படம் எந்த மதத்திற்கும், உணர்வுகளுக்கும் எதிரானது அல்ல. அத்தோடு நல்ல திரைப்படங்களை வழங்க வேண்டும் என்பது மட்டுமே எங்கள் நோக்கமே தவிர, ஒருநாளும் எந்த மத உணர்வுகளுக்கும், நம்பிக்கைகளுக்கும் எதிராகவே, புண்படுத்தும் விதமாகவோ செயல்படுவது அல்ல.

எனினும் குறிப்பிட்ட சில வெளிநாடுகளிலும் மத உணர்வுகள் புண்படுவது போன்ற காட்சிகள் ஒரு திரைப்படத்தில் இருந்தால், அந்த படம் தணிக்கையைத் தாண்டுவது மிகக் கடினம். அத்தோடு குறிப்பாக மலேசியா, சிங்கப்பூர், ஓமன், பக்ரைன், ஐக்கிய அரபு நாடுகள், ஆகிய நாடுகளின் தணிக்கை விதிகள் கடுமையானதாக இருக்கும்.

ஆனால் மேற்குறிப்பிடப்பட்டு உள்ள அந்த நாடுகளிலேயே ஃபர்ஹானா திரைப்படம் எந்த வித சிக்கலும் இன்றி தணிக்கை செய்யப்பட்டு வெளிட்டயீட்டுக்குத் தயாராகிவிட்டது. எனினும் இதுவே ஃபர்ஹானா எந்த விதமான சர்ச்சையையும் உள்ளடக்காத படம் என்பதை தெளிவுபடுத்துகிறது.இவ்வாறு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்து இருக்கிறார். 




Advertisement

Advertisement