• Jul 23 2025

விஜய்யை உடனடியாக கைது செய்யுமாறு... முக்கிய அரசியல் பிரபலம் போலீசில் புகார்... பரபரப்பில் திரையுலகம்..!

Prema / 2 years ago

Advertisement

Listen News!

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் லியோ. இப்படத்தினுடைய பர்ஸ்ட் சிங்கிள் ஆன 'நா ரெடி' பாடலானது தளபதியின் பிறந்தநாள் ஸ்பெஷலாக கடந்த ஜூன் 22-ஆம் தேதி வெளியானது.

இப்பாடல் ஆனது வெளியான நாள் முதலே சிறந்த வரவேற்பை பெற்று வருவது மட்டுமில்லாமல் சில விமர்சனங்களையும் சந்தித்து வருகின்றது. அந்தவகையில் தற்போது லியோ பட பாடலுக்கு எதிராக சென்னை காவல் ஆணையரிடம் புகார் மனுக்கள் குவிந்த வண்ணம் இருக்கின்றன.


அதில் குறிப்பாக சென்னை கொருக்குப்பேட்டை பகுதியை சேர்ந்த சமூக ஆர்வலர் செல்வம் ஆன்லைன் மூலமாக இந்தப் புகார் மனு அளிக்கப்பட்டது. அதேபோன்று அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா அவர்களும் இந்தப் பாடலினைத் தடை செய்ய வேண்டும் எனவும் கூறியிருந்தார்.


இந்நிலையில் தற்போது அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா போலீஸ் நிலையத்தில் விஜய்யைக் கைது செய்யுமாறு கூறி மனு ஒன்றினை அளித்திருக்கின்றார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் அவர் தெரிவிக்கையில் "உயர்திரு டிஜிபி சங்கர் கோபால் அவர்களை சந்தித்து நேரில் நடிகர் விஜய் அவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஒரு மனு கொடுத்துவிட்டு வந்திருக்கேன், அதற்கு காரணம் என்னவெனில் 'நா ரெடி தான் வரவா' பாடல் "புற்றுநோயை விளைவிக்கும்" என்ற வாசகம் கூட இல்லாது வெளியாகி இருந்தது.

அதுமட்டுமல்லாது இதில் வரும் வரிகள் யாவும் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தவறான பாதைக்கு ஊக்குவிக்கும் வகையில் அமைந்திருந்தது. அந்த வரிகளை நீக்குமாறு கூறியும் நீக்கவில்லை, இதனையடுத்து நான் ஒரு பேட்டி ஒன்றினையும் அளித்திருந்தேன், அதனைப் பல பேர் பார்த்திருந்தனர். இதனைத் தொடர்ந்து நடிகர் விஜய் பணம் கொடுத்து பேக் ட்விட்டர் கணக்குகளை திறந்து பயன்படுத்தத் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி எனக்கு அச்சுறுத்தல் விடுத்திருக்கின்றார்" எனத் தெரிவித்திருக்கின்றார் அனைத்து மக்கள் கட்சியின் தலைவர் ராஜேஸ்வரி பிரியா.

எது எவ்வாறாயினும் நடிகர் விஜய்யைக் கைது செய்யுமாறு கூறி ஒரு அரசியல் பிரபலம் மனு அளித்துள்ளமை திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது.

Advertisement

Advertisement